மதுரை காமராஜ்
பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,)
நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பல்கலையின்
எம்.எஸ்.சி., சி.எஸ்.,/ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல்,
வேதியியல், கவுன்சிலிங் அண்ட் பிஸியோதெரபி, எம்.காம்., எம்.காம்.,
பைனான்ஸ், எம்.டி.எம்., எம்.எஸ்.டபுள்யூ., எம்.ஏ., தமிழ், இசை, இந்திய
பண்பாடு மற்றும் பி.லிட்., ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன. இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க
விரும்புவோர் மதிப்பெண் பட்டியலுக்கு காத்திருக்காமல் அதற்கான
விண்ணப்பங்களை www.mkuniversity.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் கட்டணத்தை 'டிடி'யாக இணைத்து ஜன., 5க்குள் அனுப்பி வைக்க
வேண்டும் என தேர்வாணையர் விஜயன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...