அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித் தேர்வின்
அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்; வேலைவாய்ப்பக
பதிவு மூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு
அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை
ஏழை, கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று பாமக நிறுவனர்
ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,
கடந்த 17.11.2014 ஆம் ஆண்டு தமிழக
அரசின் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் இனி சிறப்பாசிரியர்கள் எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்
அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர் என
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்த
புதிய நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களை தகுதித்தேர்வின்
மூலம் நியமிப்பதே தவறானது என்ற கருத்து
கல்வியாளர்கள் மற்றும் சமூகநீதியாளர்கள் மத்தியில்
நிலவி வருகிறது. இந்த நிலையில் சிறப்பாசிரியர்களையும்
தகுதித்தேர்வின் மூலம் நியமிக்க துடிப்பது
சரியானதல்ல. இதன்மூலம் சிறப்பாசிரியர்களுக்கான கல்வித் தகுதி பெற்று
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு
பத்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்கள் கடுமையாக
பாதிக்கப்படுவார்கள். நீண்டகாலமாக வேலைக்காக காத்திருப்பவர்களும், தமிழக அரசால் கடந்த
2012 ஆம் ஆண்டில் பகுதி நேர
சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானோரும் 40 வயதைக் கடந்தவர்கள் ஆவர்.
இவர்களாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களாலும்
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான தகுதித் தேர்வை எழுதி
தேர்ச்சி பெறுவது கடினமானதாகும் என்று
கூறியுள்ளார்.
ஐயா நன்றி. இந்த கருத்து சட்டசபையில் எதிரொலிக்கட்டும்
ReplyDeleteThank you so much iya
ReplyDeleteஇந்த அரசு பரிசீலனை செய்ய
ReplyDeleteவேண்டும்
iyaa.realy u r prooving samooga neethi kavalar..thank you..
ReplyDelete