Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரம் தலைமறைவு மாணவனை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரி தகவல்

         பள்ளியில் உள்ள ஆசிரியர்களை தொடர்ந்து தாக்கி வரும்  மாணவனை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று  திருவள்ளூர் கல்வி மாவட்ட அதிகாரி கூறினார்.
 
      மதுரவாயல் அரசு  மேல்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் +2 ஆசிரியை பாடத்தை  லட்சுமியை என்ற ஆசிரியை +2 மாணவன் கண்ணத்தில் அறைந்தான்.  இதில் ஆசிரியையின் காது ஜவ்வு கிழிந்தது. பயந்துபோன மாணவன்  தப்பியோடினான். இந்நிலையில் நேற்று திருவள்ளூர் கல்வி மாவட்ட  அதிகாரி சந்திரசேகர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இது குறித்து  கேட்டறிந்தார். அப்போது தாக்கப்பட்ட ஆசிரியை லட்சுமி, நான் காவல்  நிலையத்தில் முறைப்படி புகார் தரவில்லை. பள்ளியில் எடுக்கும்  நடவடிக்கையே போதுமானது. மாணவரை பழிவாங்க வேண்டும் என்ற  நோக்கம் எனக்கு இல்லை என்றார்.

          இது குறித்து சந்திரசேகர் கூறும்போது, பள்ளி மாணவன் ஆசிரியையை  அடித்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒழுங்கீன செயல். அடித்த மாணவர்  தலைமறைவாக உள்ளார். அவரிடம் விசாரித்து, எழுத்துப்பூர்வமான  விளக்கத்தை பெற்ற பின்னரே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இருந்தபோதிலும் இந்த மாணவர் இதே பள்ளியில் கடந்த வருடம்  ஆசிரியர் ஒருவரை தாக்கியுள்ளார். ஆகவே, இவரை பள்ளியை விட்டு  நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.




5 Comments:

  1. TET 2013 5% மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
    நண்பர்களே நாம் 5% மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்று இருந்த நேரத்தில் அதற்கான சாண்றிதழ்கள் பெற்ற பின்பு தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வரும் 8 ம் தேதியுடன் இறுதி நாள் ஆகும். எனவே டிசம்பர் 9 ம் தேதிக்கு பிறகு இந்த வழக்கு விசாரனைக்கு வருகிறது.

    5% ஆதரவாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்தாலும் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிரான ஆதரங்கள் வலுவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது. எவை எப்படி இருப்பினும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சாண்றிதழ் செல்லும் என்றும் இனி வரும் பணி நியமனங்களில் நம்மையும் சேர்த்து வெளியிட தமிழக அரசிடம் அமைதியாக வலியுறுத்துவோம்.

    அதற்கு 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட வாரியாக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு 5% மூலம் வெற்றி பெற்றவர்களை தேடி கண்டுபிடித்து ஒரு வெள்ளை தாளில்

    வரிசை எண். பெயர் ஊர் தகுதி தேர்வு எண் கையெழுத்து

    என்ற முறையில் வரிசையாக உங்களால் முடிந்தவரை பெற்று அதனை சொந்த பொறுப்பில் வைத்திருங்கள் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்போம். இவ்வாறு பெறப்படும் இந்த மனுவை ஒரு முறைப்படி மனுவாக எழுதி அதோடு இதையும் சேர்த்து
    மக்களின் முதல்வர் அம்மாவின் மக்கள் நல அரசின் தமிழக முதல்வருக்கு இந்த மனுவை அளிப்போம். கண்டிப்பாக நமக்கு இந்த அரசு ஒரு நல்ல தீர்வை அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருப்போம். 100% அரசிடம் அமைதியான வழியில் தீர்வை பெறுவோம்.

    இப்படிக்கு
    திரு. பொன்மாரி
    திருநெல்வேலி மாவட்டம் 99767245803
    தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர்

    K.ரஞ்சித்குமார்
    பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772

    John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311
    நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர்



    மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
  2. போன் நம்பர் சரி பார்க்கவும் 10 நம்பர் இதில் உள்ளது
    திரு. பொன்மாரி
    திருநெல்வேலி மாவட்டம் 9976724803
    தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர்

    ReplyDelete
  3. ஆசிரியையை தாக்கிய மாணவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து "சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில்" அவனை நல்வழிபடுத்தாவிடில் , அவன் தற்போது உள்ள "நடமாடும் மனித மிருக நிலை"யே தொடரும் ....

    "பள்ளியாசிரியர் பாதுகாப்பு சட்டம்" இயற்றி ஆசிரியர்களை இது போன்ற மாக்களிடமிருந்து காப்பாற்ற அரசும் , ஆசிரியர் சங்கமும் முன்வர வேண்டும்

    ReplyDelete
  4. THAT STUDENT MUST BE PUNISHED. THEN ONLY OTHERS SHOULD NOT FOLLOW IN FUTURE.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive