திருவள்ளூர்
மாவட்டத்தில், மூன்று ஒன்றியங்களுக்கு உட்பட்ட நான்கு கிராமங்களில்,
புதிதாக நான்கு தொடக்கப் பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. இந்த
பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திருவள்ளூர்
மாவட்டத்தில் 1,072 தொடக்கப் பள்ளிகளும், 300 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.
மாவட்டத் தில் தொடக்கப் பள்ளிகள் இல்லாத, தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கல்வி
அதிகாரிகள், கடந்த ஆண்டு ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளிகள் இல்லாத
பகுதியாகவும், நெடுந்துாரம் பள்ளிக்கு சென்று வரும் பகுதிகளாகவும்,
மாவட்டம் முழுவதும், 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை கல்வி துறை
அடையாளம் கண்டது. இங்கு தொடக்கப் பள்ளிகளை திறக்க, இயக்குனரகத்திற்கு
பரிந்துரை செய்யப்பட்டது.
அவற்றில், தேவையான
நிலம் மற்றும் போதுமான மாணவர் எண்ணிக்கை பல்வேறு சாத்தியக்கூறுகளின்
அடிப்படையில், திருத்தணி, மீஞ்சூர், பூண்டி ஆகிய மூன்று ஒன்றியங்களில்,
நான்கு குடியிருப்பு பகுதிகளில், புதிய தொடக்கப் பள்ளிகளை திறக்க அனுமதி
வழங்கப்பட்டது.
இந்த குடியிருப்பு
பகுதிகளில் பள்ளிகளை திறக்க, மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர்களுக்கு,
தொடக்கப் பள்ளி இயக்குனரகம், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலம் கடந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நடப்பு ஆண்டிலேயே இந்த பள்ளிகள்
செயல்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய
தொடக்கப் பள்ளிகள் மாவட்டம் முழுவதும் இன்றே துவங்கப்படுகின்றன. புதிய
பள்ளிகளுக்கு தேவைப்படும் இரண்டு ஆசிரியர்கள், அருகில் உள்ள பகுதிகளில்
உள்ள பள்ளியில் இருந்து மாற்றுப்பணியில் பணிபுரியவும், உதவித்
தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு தேவையான
வகுப்பறைகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக கட்டப்பட்டு வருவதால்,
தற்காலிகமாக, அங்கன்வாடி மையத்திலோ அல்லது, ஊராட்சிக்கு சொந்தமான
கட்டடத்திலோ பள்ளிகள் இயங்கவுள்ளன. மேலும், இந்த பள்ளிகளில் சேர்க்கப்பட
வேண்டிய மற்றும் தற்போது தொலை துாரத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வரும்
மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு
மாற்றுச்சான்றிதழ் கொடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநிலம்
முழுவதும், மொத்தம் 128 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் இன்று
முதல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக
துவக்கப்படும் தொடக்கப் பள்ளிகள்
ஒன்றியம் ஊராட்சி குடியிருப்பு பகுதி
பூண்டி வேலகாபுரம் மேட்டு காலனி
பூண்டி மாம்பாக்கம் அம்பேத்கர் நகர் பெரிய காலனி
திருத்தணி முருக்கம்பட்டு முருக்கம்பட்டு காலனி
மீஞ்சூர் சிறியப்பாக்கம் சிர்லப்பாக்கம்
காலம் போன கடைசியில் சங்கரா! சங்கரா!
ReplyDeleteகாலம் போன கடைசியில் சங்கரா! சங்கரா!
ReplyDelete