தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 சட்டம்
நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை
நடைபெற்றது. கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய
மாநிலங்களிலிருந்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இந்தக் கூட்டத்தில்
பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கல்விக்கான தேசிய கூட்டணியின் அமைப்பாளர் ரமா காந்த் தேசாய் கூறியது:
கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தி 5 ஆண்டுகள் ஆனாலும் அதில் பல்வேறு
அம்சங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழகத்தைப்
பொருத்தவரை இந்தச் சட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முறையாக
அமைக்கப்படவில்லை. குறிப்பாக, இந்தச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளின்
ஒரு கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பகுதிகள் எவை என
உள்ளாட்சி அமைப்புகள் வரையறை செய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அது
செய்யப்படவில்லை என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...