ரேஷன் கார்டுக்கு
உள்தாள் பெற, குடும்பத்தலைவர் மட்டுமே வர வேண்டும், என்ற உத்தரவால்,
பொதுமக்கள் அதிருப்தியடைந்தாலும் கூட, அப்போது மட்டுமே போலி ரேஷன்
கார்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்பதில், அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.
திருப்பூர்
மாவட்டத்தில் உள்ள 1,092 ரேஷன் கடைகளிலும், உள்தாள் வழங்கும் பணி நேற்று
துவங்கியது. அந்தந்த கடைகளில் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தினமும்
150 முதல் 200 கார்டுகளுக்கு உள்தாள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில்
அதுதொடர்பான விவரம் வெளியிடப் பட்டுள்ளதால், அந்தந்த நாட்களில் செல்ல
அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்தாள் பெறுவதற்கு "ரேஷன் கார்டு போட்டோவில் உள்ள,
குடும்ப தலைவர்கள் மட்டும் கடைக்கு வந்து உள்தாள் பெற வேண்டும்' என்று,
கடைகளின் முன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. குடும்ப தலைவர் இறந்திருந்
தால், இப்போதைய புதிய தலை வரின் போட்டோவை மாற்றம் செய்து, அதன்பின்,
உள்தாள் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், வேலைக்கு
செல்லும் குடும்பத்தில், குடும்பத்தலைவர் மட்டுமே வர வேண்டும் என்ற
அறிவிப்பு, அதிருப்தி அளிக்கிறது, என பொதுமக்கள் தரப்பில்
குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது குறித்து
பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூரை பொறுத்தவரை , பெரும்பாலும் கணவன்-மனைவி
இருவருமே வேலைக்கு செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இன்னும் சில வீடுகளில் கணவன் மட்டும் வேலைக்கு செல்கின்றார். திங்கள் முதல்
வெள்ளி வரையிலான நாட்களில் மட்டும் உள்தாள் வழங்கப்படுகிறது.
விடுபட்டவர்கள், சனிக்கிழமை பெற்றுக்கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.உள்தாள் பெறுவதற்காக வேண்டி, குடும்ப தலைவர் வேலைக்கு
லீவு எடுத்துக்கொண்டு, ரேஷன் கடையில் வரிசையில் காத்திருக்க
வேண்டியுள்ளது. கார்டில் போட்டோ இல்லாத, குடும்ப தலைவி உள்தாள் பெற
சென்றாலும், உள்தாள் வழங்கப்படுவதில்லை.அரசு அறிவித்துள்ளபடி, 18 வயது
பூர்த்தியான குடும்ப உறுப்பினர்கள் வந்தாலும் உள்தாள் வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகா பகுதிகளில்,
கார்டில் போட்டோ இல்லாத குடும்ப தலைவி அல்லது 18 வயது நிரம்பிய
உறுப்பினர்கள் சென்றாலும், உள்தாள் வழங்க முடியாது என்று ரேஷன் கடைகளில்
திருப்பி அனுப்புகின்றனர்.தொழிலாளர்கள் நலன்கருதி, குடும்ப தலைவர்
மட்டுமல்லாது, 18வயது நிரம்பிய உறுப்பினர்களிடமும் உள்தாள்களை
ஒப்படைக்கவும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலும் உள்தாள் வழங்க மேற்கொள்ள,
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்
கூறினர்.
இதுகுறித்து மாவட்ட
வழங்கல் அலுவலர் செல்வன் கூறுகையில், ""அரசின் உத்தரவுப்படி, ரேஷன்
கார்டிலுள்ள குடும்ப தலைவரிடம் மட்டும் உள்தாள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், போலி கார்டுதாரர்களையும், போலியாக உள்தாள் பெற்றுச்செல்வதையும்
கட்டுப்படுத்தும் வகையில், இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குடும்ப
தலைவர் இறந்திருந்தால்,
கார்டுதாரர்கள் புதிய போட்டோவை மாற்றும் பணிகளை முடிக்க ஏதுவாகவும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...