பள்ளிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில், 'கடுமையான தவறு செய்யும் மாணவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புமாறு' மாவட்ட போலீஸ் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இதனை தடுக்க, குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பதினெட்டு வயதிற்கு குறைவான மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு அனுப்புமாறு மாவட்ட போலீஸ் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் குற்றம் செய்யும் ஓரிரு மாணவர்களை பிரித்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு அனுப்புவதால், அப்பள்ளியில் மற்ற மாணவர்கள் நிம்மதியாக படிக்க வழி ஏற்படுத்த முடியும் என அந்த குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» குற்றம் செய்யும் மாணவர்களை சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்க அறிவுரை
போலீசார் குறிப்பிட்ட படி "மாணவ குற்றவாளிகள் " மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அடக்குவீர்களா ??
ReplyDeleteஅல்லது "மன்னிப்பு " என்ற பெயரில் மீண்டும் குற்றம் செய்ய உதவுவீர்களா ??
அருப்புக்கோட்டை சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் & காவல்துறை வழங்கிய "மன்னிப்பு " தானே அப்பாவி மாணவனின் உயிரை பறித்தது ... அந்த குற்றவாளியை ஆரம்ப கட்டத்தில் பல்லை பிடுங்கி இருந்ததாலே அந்த விஷ பாம்பு அடங்கி இருக்கும் . அதை விடுத்து பெருங்குற்றம் (உயிர் பலி) நடக்கும் வரை வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரி கூட்டம் & பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க பட வேண்டும்