முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, கடந்த
மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலுவை தொகை வரும்
பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படுமா என,
பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த
2012ல், 5,000 ரூபாய் மாத சம்பளத்தில்,
16,500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட்டனர். கடந்தஏப்ரல் முதல், இவர்களின் சம்பளம்
7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது, நவம்பர் மாதம்
அமலுக்கு வந்தது. ஏப்ரல் முதல்,
அக்டோபர் வரையிலான ஊதிய உயர்வு தொகை,
பின் வழங்கப்படும் என்றஅறிவிப்புடன், கடந்த இரண்டு மாதங்களாக,
7,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. முன் தேதியிட்ட ஊதிய
உயர்வு தொகை, வரும் பொங்கல்
பண்டிகைக்கு முன் வழங்கப்படுமா என்ற
எதிர்பார்ப்பில், பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து, பகுதிநேர ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'முன்
தேதியிட்ட சம்பள உயர்வு நிலுவை
தொகையை, பொங்கல் பண்டிகைக்கு முன்
வழங்கினால், இந்த ஆண்டு சிறப்பான
துவக்கமாக எங்களுக்கு அமையும். அரசின் அறிவிப்பை ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...