பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள்,
மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும்
அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு
குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மருத்துவ இணை
இயக்குனர், குழந்தைகள் நல அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், போலீசார் இடம்
பெற்றுள்ளனர். இக்குழு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கும். ஆண்
ஆசிரியர்கள் பெண் குழந்தைகளை எப்படி கண்காணிக்க வேண்டும். பெண் ஆசிரியர்கள்
ஆண் குழந்தைகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து
விளக்கும்.எல்.கே.ஜி., முதல் கல்லுாரி வரை மாணவர்களை கையாள்வது,
மாணவர்களின் மன நிலை வயதிற்கு தகுந்த மாதிரி மாறும் என்பது குறித்தும்
பயிற்சி வழங்கப்படும்.
மேலும் மாணவர்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு
அவர்கள் செல்லும் வாகனங்களின் பதிவு எண், வாகன டிரைவர்கள், பெற்றோரின்
மொபைல் எண்களை ஆசிரியர்கள் ஆவணமாக பராமரிக்க வேண்டும். தவறு செய்த
மாணவர்களின் வாழ்க்கை வீணாகாமல் அவர்களை இக்குழுவினர் தங்கள் கண்காணிப்பில்
படிக்க வைப்பர்.பள்ளி்க் குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர்களின் மொபைல்
எண்களை மனப்பாடம் செய்வது, தன்னை கடத்தும் வாகன எண்ணை மனப்பாடம் செய்வது
குறித்து பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி குறித்தும்
விளக்கப்பட உள்ளது.மருத்துவ இணை இயக்குனர் ரவிகலா கூறுகையி்ல், ''அனைத்து
மாவட்டங்களிலும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைகளை தடுக்க
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். ஒழுக்கம் சம்பந்தமான, உடல்
ரீதியான கவுன்சிலிங்கும் வழங்குவர்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...