பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை,
மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பரமக்குடி அருகே
பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில்
பிளஸ் 2 படிக்கிறார்.
நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில
பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில்
இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார். இதை தலைமை
ஆசிரியர் கண்டித்தார். இதனால் தலைமை ஆசிரியருடன் மணி வாக்குவாதம் செய்தார்.
சிறிது நேரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து மணி கூறுகையில். ''எனது நோட்டில் காகிதத்தை கிழித்து கீழே
போட்டேன். அப்போது தலைமை ஆசிரியர், 'எதற்கு கிழித்து போடுகிறாய்' என தகாத
வார்த்தையில் பேசி, கம்பால் அடித்தார்,'' என்றார்.
தலைமை ஆசிரியர் முருகன் கூறுகையில், “நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது
தொடர்ந்து காகிதத்தை கிழித்து போட்டதால் கண்டித்தேன். என்னை அவன்
தாக்கியதால் நிலை குலைந்து கீழே விழுந்தேன். தொடர்ந்து என்னை தாக்கிவிட்டு
ஓடினான்,” என்றார்.
பரமக்குடி கல்வி அலுவலர் பழனியாண்டி கூறுகையில், “தலைமை ஆசிரியர், மாணவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
My father was a teacher.... I am also a teacher.... When I was studying 4th std a teacher punished me... My father was working in same school.. He was seeing that...but no asking any question to him.. That was good period.. But now..!..?
ReplyDeleteவழக்கம் போல மாணவனுக்கு "உதை விழா பாராட்டு" தந்து ,மீண்டும் அதே பள்ளியில் சேர்த்து மற்ற ஆசிரியர்களுக்கும் பீதியை தர முடிவு செய்வார்கள் .. .
ReplyDeleteஏற்கனவே மாணவர்களிடம் ஆசிரியர்கள் வாங்கிய அடி,உதை சம்பவங்களே சாட்சி...
"மாணவர் நலன் பேணுகிறோம்" என்ற போர்வையில் "வருங்கால கிரிமினல்களை" வளர்க்கலாமா ?????
anaithirkum arasiyalthan karanam, pavam asiriyargal.
Deleteethuve manavanai asiriyar adichiruntha entha asiriyar nelai?
Go to school
ReplyDeleteCome back from school
Get the salary
Moral education solve this type of problem
ReplyDeleteமாணவன் மீண்டும் பள்ளிக்கு வருவார்
ReplyDeleteஆசிரியர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு பாடம் நடத்த வேண்டியதுதான்
இதுதானே இன்றைய ஆசிரியர்களின் நிலைமை
அரசும் வரவேற்கிறது வருங்கால வன்முறையாளர்களை.!
ReplyDeleteதண்டனைகள் மிகையானால் தான் தவறுகள் குறையும்.
“மறப்போம் மன்னிப்போம் மாணவர்களை” என்ற கோரிக்கையை மேலோட்டமாக பார்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் சட்டத்திற்கும் பெற்றோருக்கும் பெரியோர்களுக்கும் கட்டுப்படாத சுயநலமுள்ள சமூகத்தை நாம் வார்த்து வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் ஆசிரியர்களுக்குதான் பிரச்சினை என்று ஒதுங்கி கொண்டிருக்கும் இன்றைய சமூகம் நாளை மிகவும் ஒரு மோசமான சூழ்நிலையை சந்திக்க உள்ளது என்பது நிச்சயம். எனவே உறக்கத்திலிருந்து நாம் வெளி வந்து நம் மாணவ சமூகத்தை சரியான வழி நடத்த அரசாங்கம்., பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட்ட அனைவரும் உறுதி பூண்டு செயல்பட வேண்டும்.
ReplyDeleteSamuthayam seeralinthi poga poginrathu. Aasiriyarai mathilkathavan naalaikku sattathai yeppadi mathippaan.
ReplyDelete