Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விருதுநகர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு.

           விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள், விடுதி காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
 
             இது தொடர்பாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நரிக்குடி, ஆணைக்குளம் மற்றும் முக்குளம் ஆகிய 3 உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் விடுதி காப்பாளர், பகுதி நேர கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் கணக்காளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில், விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரமும், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.5 ஆயிரமும், கணக்காளர் பணிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இதில், விடுதி காப்பாளர் பணிக்கு மட்டும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் விடுதியில் தங்கி பணியாற்ற வேண்டும். கல்வி தகுதி: விடுதி காப்பாளர்கள் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டத்துடன், ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல் கணினி ஆசிரியருக்கு கணினியில் இளங்கலை பட்டத்துடன் பி.ஜி.டி.சி.ஏ, டி.சி.ஏ முடித்தவராகவும், உடற்கல்வி ஆசிரியருக்கு இளங்கலை பட்டத்துடன் பி.பி.எட் அல்லது சி.பி.எட், கணக்காளர் பணிக்கு பி.காம் பட்டப்படிப்புடன் மற்றும் டாலி பயிற்சி முடித்திருக்க வேண்டும். இப்பணியிடங்கள் அனைத்திற்கும் பெண் பணியாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணியிடங்கள் தொடர்பாக திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் கல்வி இயக்கம், சுப்பையா நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், விருதுநகர் மாவட்டம், என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து வருகிற 8-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு தொலை பேசி எண்:04562-243218 அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.




1 Comments:

  1. Hostel warden ku salary 25000,account paakurathuku 10000salary...computer science teacher ku 5000salaryam enna kodumai ithu..cs padicha elartm paava patavargala?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive