திருவள்ளூர்
மாவட்டத்தில் 2014-15-ஆம் ஆண்டுக்கான கணினி பட்டதாரி ஆசிரியர் பரிந்துரை
பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என கணினிப் பட்டதாரிகள்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்
கூட்டத்தின் போது இந்த மாவட்டத்தில் உள்ள கணினிப் பட்டதாரிகள் 50-க்கும்
மேற்பட்டோர் பங்கேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவின்
விவரம்: 2014- 15-ஆம் ஆண்டுக்கான கணினிப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில்
வெளியிடப்பட்டுள்ள 250 பேரில் 130 பேர் இதரப் பட்டங்களை முடித்தவர்கள்.
கணினிப் பட்டதாரிகள் ஏராளமானோர் இருக்கும்போது இதர பாடப்பிரிவுகளை முடித்த
பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து இந்தப் பட்டியலில் உள்ள குளறுபடியை நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...