காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பிய
மதிப்பெண் பட்டியல், பட்டய சான்றிதழில் படித்து தேர் வெழுதிய "கோர்ஸ்'
பெயர் தவறுதலாக அச்சிடப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை வழங்கும் தொலை நிலை
கல்வியில் 54 வகையான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளும், இதற்காக நாடு
முழுவதும் 115 தேர்வு மையங்களும் செயல்படுகின்றன.
இப்பல்கலைக் கழக தொலை நிலைக் கல்வி வாயிலாக 98-99 ம் ஆண்டில் "எம்.ஏ.மாஸ்
கம்யூனிகேசன் அன்ட் ஜர்னலிசம்' என்ற படிப்பு துவங்கி, இதில் பயின்ற
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக்குழு
வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் 2012 ம் ஆண்டு முதல் இப்படிப்பிற்கு
"மாஸ்டர் ஆப் ஜர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேசன்' என்று கோர்ஸ் பெயர்
மாற்றப்பட்டது. இப்படிப்பிற்கு கால அளவு இரண்டு ஆண்டு. இப்படிப்பில் 2012ல்
சேர்ந்து 2013ல் இறுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல் கலை
தேர்வு துறையிலிருந்து அனுப்பிய பட்டயம் மற்றும் மதிப்பெண் சான்றிதழில்
"மாஸ்டர் ஆப் ஜர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேசன்' என, வழங்குவதற்கு பதிலாக
"எம்.ஏ., ஜர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேசன்' என, தவறுதலாக அச்சிடப்பட்டு
வழங்கப்பட்டுள்ளது. சர்பிக்கேட்டில் தவறுதலாக அடிக்கப்பட்டுள்ள கோர்சின்
பெயரால் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்காது. "கோர்ஸ்' பெயர் தவறுதலாக
உள்ளதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இப்பல்கலைக்கழகம் ஏற்கனவே தேர்வே எழுதாத மாணவி ஒருவருக்கு தேர்வு முடிவுகளை
வெளியிட்டு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து மதிப்பெண்
பட்டியலை அனுப்பியது. தேர்வில் 26 மதிப்பெண் பெற்று, தோல்வியடைந்த ஒரு
மாணவருக்கு மறு மதிப்பீட்டில் 62 மதிப்பெண் பெற்றதாக சான்றிதழ் வழங்கியது.
இப்பல்கலை தேர்வு துறையில் நடக்கும் இது போன்ற முறைகேடு குளறுபடி குறித்து
பெற்றோர், மாணவர்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட
வில்லை என்ற குற்றச்சாட்டு அனைத்து தரப்பிலும் உள்ளது. பல்கலை துணைவேந்தர்
நிர்வாகக் பணிக் குழு இது போன்ற புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென
என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் கூறியதாவது: " எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன்
அன்ட் ஜர்னலிசம்' என்ற முதுகலை டிகிரியின் பெயரை மாற்றியது தெரியாமல்
சான்றிதழ் அனுப்பியதாக எங்களுக்கும் தகவல் வந்தது. மாணவர்களுக்கு எவ்வித
பாதிப்பும், இடை யூறும் இருக்காது.தவறாக "பிரிண்ட்' செய்து அனுப்பிய
சான்றுகளை திரும்பப்பெற்று, உடனே மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். இது
தொடர் பாக பல்கலை அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்டோருக்கு கடிதம் அனுப்புவோம்.
70 ஆயிரம் பேர் வரை பயிலும் இங்கு, ஒருசிலருக்கு மாறியிருக்கலாம். அதை சரி
செய்திடலாம். இனிமேல் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்வோம்,' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...