தேனியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி மாணவர்
ர.ஜீவானந்தம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தேனி அல்லிநகரம் காந்திநகர்
காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஜீவானந்தம். இவர், இங்குள்ள அரசு
மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 9-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற ஜீவானந்தம், வீட்டுக்கு வந்ததும், உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீயிட்டுக் கொண்டார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜீவானந்தத்தின் தாயார் மாரியம்மாள் அளித்த புகாரின் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இந்த நிலையில், ஜீவானந்தம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
எனவே, இப் பிரச்னை குறித்து முழு விசாரணை நடத்தவும், மாணவரின்
குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி மாவட்டச் செயலர் டி. வெங்கடேசன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறுகையில்,
இப்பிரச்னை தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் ஏற்கெனவே துறை
ரீதியிலான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...