பாரதியாரின்
பாடல்களை வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து
பள்ளி மற்றும் கல்லூரிகளில், மொழி பெயர்த்து வினியோகிக்க, மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பாரதியாரின்
பாடல்களை, நாடு முழுவதும் இருக்கிற, அனைத்து பள்ளிகளிலும் கொண்டு செல்ல
வேண்டும் என்று, நான் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கை
ஏற்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி
இரானியை சந்தித்து, இதுகுறித்து, பேசினேன். உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக
தெரிவித்தார்.
நேற்று, மீண்டும்
அவரை சந்தித்து பேசியபோது, மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தார். வரும் 11ம்
தேதியில் இருந்து, நாடு முழுவதும் உள்ள, அனைத்து பள்ளி, கல்லூரிகளில்,
பாரதியார் பாடல்கள் எடுத்துச் செல்லப்படும். அதுமட்டுமல்ல; பாரதியார் பாடல்
ஒப்பித்தல் போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு, பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...