தனியார்
கல்லூரிகளில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய
நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நியமித்துள்ளதாக தமிழக
அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தைச்
சேர்ந்த தமிழ்நாடு அரசு உதவி பெறாத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கத்தின்
தலைவர் எஸ்.செல்வமணி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
உச்ச நீதிமன்ற
உத்தரவுப் படி தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான
கட்டணத்தை நிர்ணயம் செய்ய கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது.
அதில், பாலிடெக்னிக்
கல்லூரிகள் விடுபட்டன. எனவே, தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான
கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட
வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு கடந்த முறை
விசாரணைக்கு வந்த போது, கட்டண நிர்ணயக் குழு அமைப்பது குறித்து அறிக்கை
தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில்,
தமிழக அரசின் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக சென்னை
உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு
அமைத்து, கடந்த மாதம் 18-ஆம் தேதி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டணம் தொடர்பாக
குழு அளிக்கும் பரிந்துரைகள் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற அரசு
துறைகள் தயாராக உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...