Home »
» பள்ளிக் கல்வித் துறை சார்பில் அம்பத்தூரில் இன்று முதல் அறிவியல், கணிதக் கண்காட்சி
தமிழக அரசின்
பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாநில அளவிலான 42-ஆவது ஜவாஹர்லால் நேரு
அறிவியல், கணிதக் கண்காட்சி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை
மூன்று நாள்கள் அம்பத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மேல்நிலைப் பள்ளியில்
நடைபெறவுள்ளது.
மாவட்ட
ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில்,
சமூக சுகாதாரம், சுற்றுச்சூழல், கணிதம், அறிவியலில் முக்கியத்
திருப்பங்கள், தகவல், தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், ஆற்றல் வளங்கள்,
பாதுகாப்பு, போக்குவரத்து, கழிவு மேலாண்மை ஆகிய உள் தலைப்புகளில்
கண்காட்சிப் பொருள்கள் இடம் பெறவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து
நான்கு மாணவர்களும், மூன்று வழிகாட்டி ஆசிரியர்களும் மொத்தம் 256 பேர்
இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.இதில் சிறப்பு நிகழ்வுகளாக மாதிரி
விமானம், ஹெலிகாப்டர் தொழில்நுட்பம் சார்ந்த காட்சிப் பொருள்களும், டைனோசர்
இயக்கம் பற்றிய காட்சிப் பொருளும் பொறியியல் கல்வி நிறுவனங்களால் பள்ளி
வளாகத்தில் நிகழ்த்தப்படவுள்ளன. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின்
சார்பில் அமைக்கப்பட்ட மாதிரிக் கோளரங்கக் காட்சியும், இஸ்ரோ விண்வெளி
தொழில்நுட்பம், கல்பாக்கம் மாதிரி அணு உலைகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
மூன்று நாள்களும் கண்காட்சி அரங்கில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
தொடர்ந்து நடைபெறவுள்ளன. மாலையில் பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, அறிவியல்
கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...