வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், உடற்கல்வி
ஆசிரியர்களை நியமனம்செய்ய வேண்டுமென, கல்வி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்-
இயக்குநர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் -
இயக்குநர் சங்க கூட்டம், மாநில தலைவர் ரவிச்சந்தர் தலைமையில் நடந்தது.
தஞ்சை மாவட்டசெயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி
ஆசிரியர்கள் நியமனம், முன்பு போல், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப
வேண்டும். புதிய முறையான தேர்வு முறையை அரசு கைவிட வேண்டும். புதிதாக
ஆரம்பிக்கப்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை தொடங்கும்போது,
உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, இரண்டை ஏற்படுத்த வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.பில். உட்பட அனைத்து
உயர்படிப்புக்கும் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் ஊக்க ஊதியம் வழங்க
வேண்டும். உடற்கல்வி பாடங்கள் அடங்கிய (சி.சி.முறைப்படி) ""இலவச
உடற்கல்வி"" புத்தகங்களை அரசு மூலம் வழங்குவதுடன் தேர்வுகளில் சி.சி.
முறைப்படி பாடத்திட்டங்கள் அடங்கிய கேள்வி வினாத்தாள்கள் அனைத்து
பள்ளிகளிலும் வழங்க வேண்டும். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (டி.ஐ.பி) பதவி
பணிமூப்பின் அடிப்படையில், அனைத்து கல்வி மாவட்டங்களிலும் நியமிக்க
வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...