கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு உதவித்தொகை
திட்டங்களை மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செயல்படுத்தி
வருகிறது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில்
அனைத்து வகை கல்வி உதவித்தொகைகளும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வு பெற்ற பிறகும்
ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும்
வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோல, முழுநேர ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கான உதவித்தொகை
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.38,800 என்ற அளவிலும் இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.46,500 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து ஆராய்ச்சிப் படிப்பை
மேற்கொள்பவர்களுக்கான உதவித்தொகை மாதம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாதம் ரூ.15,000 என்ற
அளவில் உயர்த்தி வழங்கப்படும்.
குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து முதுநிலைப் பட்டப்படிப்பை
மேற்கொள்பவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று முதுநிலைப்
பட்டப்படிப்பு மேற்கொள்பவர்களுக்கும் இதுவரை மாதம் ரூ.2 ஆயிரம் என்ற அளவில்
20 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகை இப்போது ரூ.3,100 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோல, பிற கல்வி உதவித்தொகைகளும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. இது
பற்றிய முழுவிவரங்கள் தெரிந்து கொள்ள www.ugc.ac.in என்ற இணையதளத்தைப்
பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...