பள்ளிக் குழந்தைகளை
21ம் நூற்றாண்டு குடிமக்களாக உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள்
மற்றும் பயிற்சிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. மாநில கல்வியியல்
மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மேற்கண்ட பயிற்சி மற்றும்
மாநாடு 2 நாட்கள் டிபிஐ வளாகத்தில் நடக்கிறது. இதை தொடங்கி வைத்து,
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:
ஒவ்வொரு
மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை
சார்ந்தே இருக்கிறது. அது, மிகையாகவோ குறைவாகவோ இருக்கும் உண்மையை பள்ளிக்
கல்வித்துறை உணர்ந்துள்ளது. ஆசிரியர்களை 21ம் நூற்றாண்டின் கற்றல்
தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கவே நாடு முழுவதும் தகவல் தொடர்பு
சார் மாநாடுகள், கருத்தரங்குகள், கற்பித்தல் சார்ந்த புதிய உத்திகளும்,
தற்போதைய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் சார்ந்த அறிமுக பயிற்சிகளும்
நடத்தப்படுகின்றன. நல்ல விழுமங்களையும் அர்ப்பணிப்பு உணர்வுகளையும்
வளர்த்தெடுக்கும் இதுபோன்ற மாநாடுகள் ஆசிரியர்களை 21ம் நூற்றாண்டுக்கு
ஏற்ப உருவாக்குகின்றன.
ஆசிரிய
கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தொழில் சார்ந்த செயற்பாடுகளை சக ஆசிரிய
சமுதாயத்தோடு பகிர்ந்துகொள்ள ஒரு மேடை அமைத்து கொடுப் பது இந்த மாநாட்டின்
நோக்கம். இந்த மாநாட்டில் ஒவ்வோர் அறையிலும் ஒரு அமர்வுக்கு குழுத்தலைவர்
ஒருவர், வழிகாட்டுவோர், ஒருங்கிணைப்பாளர், நிகழ்வுகளை பதிவு செய்வோர்,
தொழில்நுட்ப உதவியாளர் என ஒருங்கிணைந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. அமர்வு
ஒன்றுக்கு 13 முதல் 15 ஆய்வுக் கட்டுரைகளை ஆசிரியர்கள்
சமர்ப்பிப்பார்கள். இதன்படி, மொத்தம் 8 அமர்வுகள் நடத்தப்படும். ஆய்வுக்
கட்டுரைகள் சமர்ப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநாட்டின் இறுதியில்
சான்றிதழ், ஆய்வுக்கட்டுரையின் சுருக்க தொகுப்பு வழங்கப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...