Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"ஸ்னேக் ப்ரூப்" டிரஸ் போட்டுக் கொண்டு அனகோண்டாவுக்குள் புகுந்த அமெரிக்கர்

          அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இயற்கைப் பிரியர், அனகோண்டா பாம்புக்குள் உயிரோடு புகுந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சித் தொகுப்பு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
 
           மிகவும் அபாயகரமான இந்த செயலை அவர் உரிய தற்காப்பு பாதுகாப்பு ஆடையை அணிந்து செயல்படுத்தியுள்ளார். இவரது பெயர் பால் ரோசலி . இவர் 25 அடி நீளம் கொண்ட 400 பவுண்டு எடை கொண்ட பெண் அனகோண்டா பாம்புக்குள் நுழைந்து இந்த சாதனையைச் செய்துள்ளார் ரோசலி. இந்த நிகழ்ச்சியை டிஸ்கவரி சானல் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்புகிறது. தன்னுடைய பாதுகாப்பை விட பாம்புக்கு ஏதும் நேராமல் இருக்க வேண்டுமே என்று முன்னதாக கவலை தெரிவித்திருந்தார் ரோசலி. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பாம்பை அதிகம் காயப்படுத்தி விடக் கூடாது. எனது உடை மிகவும் மென்மயாக இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டேன். அது பாம்பைப் பாதிக்காத வகையில்அமைக்கப்பட்டுள்ளது. நான் பயப்படவில்லை மாறாக இந்த உடையை முன்பே பரிசோதித்து விட்டோம் என்றும் கூறியிருந்தார் ரோசலி.

            நியூ ஜெர்சியைச் சேர்ந்த ரோசலி, தனது 18 வயதில் அமேசான் நதிக்கு விஜயம் செய்த அனுபவம் கொண்டவர். பெருவுக்குச் சென்ற அவர் அங்குள்ள அ்மேசான் நதிக்குச் சென்று 60 நாட்கள் செலவிட்டார். அவருடன் 12 பேர் கொண்ட குழுவும் போயிருந்தது. ரோசலி நுழைவதற்குப் பொருத்தமான அனகோண்டாவை அவர்கள் தேடி வந்தனர் கடைசியில் ஒரு பெண் பாம்பு பிடிபட்டது. அந்தப் பாம்பை பிடித்த பின்னர் பாதுகாப்பான உடையை அணிந்து கொண்டு பாம்பின் வாய்க்குள் தலையைக் கொடுத்து உள்ளே புகுந்தார் ரோசலி. இந்த அதி பயங்கரமான நிகழ்ச்சியை டிஸ்கவரி சானல் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பவுள்ளது. அனகோண்டா பாம்புகளின் வாழ்விடத்தை பலரும் ஆக்கிரமித்து வருவதால் அவை அழியஆரம்பித்துள்ளன. இதுதொடர்பான விழிப்புணர்வுக்காகவே இந்த பயங்கரமான செயலை செய்துள்ளாராம் ரோசலி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive