Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளியில் ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் - ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி

          மதுரவாயலில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.  புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36). கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  அப்போது பிளஸ்-2 மாணவன் ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டார். இதனால் அந்த மாணவனை ஆசிரியர் லட்சுமி கண்டித்தார். 

         ஆத்திரம் அடைந்த மாணவன் ஆகாஷ் திடீரென ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியை லட்சுமி நிலை குலைந்தார்.  ஆசிரியை தாக்கப்பட்ட  தகவல் பள்ளி முழுவதும் பரவியது. இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி இன்று பள்ளிக்கு வந்தார். காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். 

          அவரை பரிசோதித்த டாக்டர்கள் காது ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு விசாரணை நடத்தினார். 

            இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரி சுவாமிநாதன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.  மாணவன் ஆகாஷ் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு ஆசிரியையை தாக்கினார். அதற்கு மன்னிப்பு கடிதம் வழங்கியதால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். இபபோது மீண்டும் அவன் ஆசிரியையை தாக்கியதால் அவனை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.




6 Comments:

  1. இது போன்ற மு#### தனமான காரியங்களை செய்ய எப்படி துணிவு வந்தது என ஆராய்ந்தால் அந்த மு####ன் தகப்பன்+குடும்ப ம் (மு### கூடம் ) தான் காரணமாக இருப்பார்கள் ...
    இந்த களைகளை அழிக்க "பள்ளியாசிரியர் பாதுகாப்பு சட்டம்" உருவாக்குமா இந்த அரசு *????

    வாய்ப்பு இல்லை என்பதே உண்மையும் கூட ... சென்னையில் ஆசிரியையை வகுப்பறையில் கழுத்தறுக்கப்பட்டு கொன்ற குற்றவாளியை "மனமுதிர்வு அடையா மாணவர்" என்று கவுன்சிலிங் கொடுத்து அரசு உதவியது ... தண்டனை ஏதும் இல்லையாம் ...

    தாயை இழந்து கதறியழுத (ஆசிரியையின் மகள் ) அந்த குழந்தைகளின் கண்ணீருக்கு இந்த அரசு சொல்லும் பதில் தான் என்ன ??

    ஆசிரியர் சங்க நிர்வாகமே வேடிக்கை பார்ப்பதா உன் வேலை ?????

    ReplyDelete
  2. மிகவும் கண்டனத்திற்கு உரிய செயல்
    ஆசிரியர்கள் மாணவ மாணவியரை அடிக்கக் கூடாது,
    மனம் நோகும் வகையில் பேசக் கூடாது, ஆனால் தேர்வு சதவீதம் மட்டும் தேவை. ஆசிரியர்களுக்கு ஆயிரம் மன உளைச்சல்கள்.
    ஆசிரியர்களுக்கு இன்று பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
    ஆசிரியரை அடித்தல், கொல்லுதல் என தொடர்ந்து கொண்டிருக்கிறது
    என்று இந்நிலை மாறுமோ

    ReplyDelete
  3. மிகவும் வேதனை தரக்கூடிய செயல். மாதா, பிதா,குரு ,தெய்வம் என்று குருவுக்கு மரியாதை கொடுத்த காலம் போய் அடிக்கும் காலம் வந்துவிட்டது.இந்த நிலை மாறினால் தான் வருங்கால சமுதாயம் உருப்படும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம். எனது ஆசிரியப் பணி 30 ஆண்டுகள் முடிந்து, இன்று (03-12-2014) 31 ஆம் ஆண்டில் பணியைத் துவக்கி உள்ளேன். எனது ஆசிரியப் பணியில், இப்போது உள்ள மாணவர்களைப் போன்று எப்போதும் கண்டதில்லை. 200 க்கு 200, 200 க்கு 199,198 போன்ற மதிப்பெண்களை எனது இயற்பியல் பாடத்தில் பள்ளியில் எடுக்க வைத்திருக்கிறேன். ஆனால், இன்று 200 க்கு 070 மதிப்பெண்ணை என்னால் எடுக்க வைக்க முடியவில்லை. ஏன் ஆசிரியப் பணியில் சேர்ந்தோம் என எண்ணுகிறேன். இரன்டு நாட்களுக்கு முன் எனது பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கூட்டம் நடத்தப்பட்டது. பல மாணவர்களின் பெற்றோர்கள் அக்கூட்டத்திற்கு வரவில்லை. பெற்றோர்களுக்கும் அக்கரையில்லை. எனது பள்ளி நான் பயின்ற பள்ளி. எனவே, இக்கால மாணவர்களை எனது காலத்தோடு ஒப்பிடும் போது, மிகவும் மோசமான மாணவர்கள் தற்போது உள்ளனர். வகுப்புக்கு வராமல் போவது, ஆசிரியர்களை மதிக்காமல் இருப்பது, செல் போன் கொண்டு வருவது, திருடுவது, கத்தியைக் காட்டி மற்ற மாணவர்களை மிரட்டுவது, தவறான ( போ)பாதையில் செல்வது இன்னும் பல தவறான பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.
    இவர்களுக்கு நாம் ஆசிரியராக உள்ளோமே என மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனையடைந்துள்ளேன். மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது. திட்டக் கூடாது. துன்புறுத்தக் கூடாது என்பதை அரசு எப்போது நீக்குகிறதோ அன்று தான் மாணவச் சமுதாயம் உருபடும். பாடத்தில் உரு போடும். நல்ல மதிப்பெண், நல்ல மாணவ சமுதாயம் உருவாகும். இனி இது சாத்தியம் இல்லை. இன்னும் 5 ஆண்டுகள் எனக்கு ஆசிரியப் பணி உள்ளது. எப்படி, எப்போது ஓய்வு பெறுவோம் என ஆண்டுகளை இல்லை,இல்லை நாட்களை எண்ணத் தொடங்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  6. Fully reason officers only...result..result....?..?.!,!moral class no....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive