அமெரிக்காவைச் சேர்ந்த பி2எக்ஸ் கேர் சொல்யூஷன்ஸ் எனும் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர் சேவை நிறுவனம் நடத்திய அந்த ஆய்வு 57 சதவீத இந்தியர்களால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது எனத் தெரிவிக்கிறது. இந்தியர்களில் மூன்றில் ஒருவர் ஒரு வார காலம் டிவி இல்லாமல் கூட இருக்கத்தயார் ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இல்லை என ஆய்வின் போது தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கும்
இந்தியா, பிரேசில், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த
ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில்
ஸ்மார்ட் போன் பழுதானால் அது சரியாக 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே
காத்திருக்கும் தன்மை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு
முடிவு சரியாக இருக்கிறதா என்று நீங்களேகூட உங்களை வைத்து சோதித்துப்
பார்க்கலாம்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...