மதுரையில் தொடக்க கல்வித் துறையில் இரவு அழைப்பு விடுக்கப்பட்டு மறுநாள்
காலை 'கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில்
உள்ளனர்.
தமிழகத்தில் 128 புதிய தொடக்க பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட
உயர்நிலைப் பள்ளிகளின் புதிய பணியிடங்களுக்கு மாறுதல் மற்றும் நியமனம்
தொடர்பான 'கவுன்சிலிங்' நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் இடையபட்டி,
வாகைக்குளம், சோமசுந்தபுரம், ஜாரி உசிலம்பட்டி ஆகிய நான்கு புதிய தொடக்கப்
பள்ளிகள் மற்றும் வடக்கம்பட்டி உயர்நிலை பள்ளி பணியிடங்களுக்கு மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நேற்று 'கவுன்சிலிங்' நடந்தது.
இதுதொடர்பாக தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள்
தகவல் தெரிவித்து காலையில் பங்கேற்க உத்தரவிட்டனர். சம்மந்தப்பட்ட
ஆசிரியர்கள் அடித்து பிடித்து 'கவுன்சிலிங்கில்' பங்கேற்று இடங்களை தேர்வு
செய்தனர்.ஆசிரியர் ஒருவர் கூறுகையில் "இவ்வளவு அவசர அவசரமாக 'கவுன்சிலிங்'
நடத்த வேண்டிய அவசியம் ஏன் என்று தெரியவில்லை. மர்மமாக உள்ளது" என்றார்.
அது ஒன்றும் இல்லை .சீனியாரிட்டி போய்விடும் என்று கவனித்து ?? இருப்பார்கள் .அதனால் தொ.க.இ.மற்றும் சம்பந்தமான பிரிவு அலுவலர் கூட தேதி இல்லாமல் கையெழுத்து போட்டு கடமையாற்றினார்கள்.
ReplyDelete