முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரதரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய
ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர்.
மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் அவர்
தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே போல் கல்வியாளர் மதன் மோகன் மால்வியாவுகும்
பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாரண
இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா சுதந்திர
போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர்
அடல் பீகாரி வாஜ்பாய் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் இந்து சமாஜ் இயக்க
தலைவருமான மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத
ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வாஜ்பாயின்
90வது பிறந்த நாள் நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரை
கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த விருதினை அறிவித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...