நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்: 962 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சி.ஏ.வோ, காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டண்ட்டாகவோ, கம்பனி செகரட்டரியாகவோ தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 2015 ஜனவரி 1 அன்று 20-30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை உண்டு. சம்பள விகிதம்: 16,400/- முதல் 40,000/- போட்டித் தேர்வு: போட்டித் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. இரண்டு தாள்களும் சேர்ந்து மொத்த மதிப்பெண்கள் 450. விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ரூபாய் 1000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட இயலும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டண விலக்கு உண்டு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2014 தேர்வு நாள்: 22.02.2015
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...