நேற்று இடைநிலை ஆசிரியர்கள் 9300-4200 ஊதிய
வழக்கு எண்:4420/2014 விசாரணைக்கு 25 வது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது
அரசுதரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை நீதியரசர் consideration என்று
(மனுவை பரிசீலயுங்கள்) என்று ஆணை பிறப்பிக்கலாமா என்று நமது வழக்கறிஞரிடம்
கோரினார்கள்.
நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் திரு ;
சி.செல்வராஐ் அவர்கள் , எதுவாயினும் நீதி மன்றத்தில் அரசின் பதில் மனு
பெற்று ,நீதிமன்றத்திற்குள் முடிவு செய்ய
வேண்டும் என்றும் எங்களுக்கு இறுதி விசாரணை
நடத்தி தீர்ப்பை தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார் அதன் அடிப்படையில்
அரசுக்கு கால அவகாசம் 15 நாட்கள் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.அரசு
தரப்பில் இதை அவசர வழக்காக விசாரிக்க தேவையில்லை என்ற கருத்து முன்
வைக்கப்பட்டது ஆனால் நமது தரப்பில் ஊதிய குழு அமுல் படுத்தி 5 ஆண்டுகள்
ஆகிவிட்டன அடுத்த ஊதிய குழுவும் வரப்போகிறது என்று கேட்டுக்கொண்டார் அதை
ஏற்ற நீதிமன்றம் அக்கருத்தை நிராகரித்தார்.எனவே நமது வழக்கு மீண்டும் கால
அவகாசம் முடிந்தவுடன் விசாரணைக்கு வரும்.!!!! மாவட்ட மாறுதலில் உச்ச
நீதிமன்றத்தில் பதிவு செய்தை போல் இதிலும் வெற்றி பெறுவோம்.
உண்மையை சொல்வோம் !!!சொல்வதை செய்வோம் !!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...