தமிழகத்தில், கட்டாய
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான
கல்விக் கட்டணம், 25.13 கோடி ரூபாயை அரசு தர வேண்டும் என்றும், இந்த
ஆண்டு, 89,954 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டாய கல்வி உரிமைச் சட்ட
மாநில தலைமை தொடர்பு அலுவலரும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருமான பிச்சை
தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து,
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி,
மாணவர்கள் சேர்க்கப்பட்டதில், 23 கோடி ரூபாய் ஊழல் என செய்தி வெளியாகி
உள்ளது. இதில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், 2,959 பேர் சேர்க்கப்பட்டதாக
தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த, 2013 - 14, 2014 - 15ல், முறையே,
49,864 மற்றும் 89,954 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 2013 - 14ல்
சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டணம்,
25.13 கோடி ரூபாய் ஒதுக்கக் கேட்டு, கருத்துருக்கள் அனுப்பப்பட்டு,
உத்தரவு எதிர்நோக்கப்படுகிறது.
மேலும், 25 சதவீத இட
ஒதுக்கீட்டின் கீழ், நுழைவு நிலை வகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்
சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான, மே 3ம் தேதியில் இருந்து, 9ம்
தேதி வரை என்பதை, 18ம் தேதி வரை நீட்டித்து, அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், வாய்ப்பு
மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினர் அனைவரும், பயன் பெற ஏதுவாக பள்ளி
துவங்கிய நாளில் இருந்து, ஆறு மாதங்கள் வரை, இச்சேர்க்கையை மேற்கொள்ள,
பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டு
உள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...