ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் 885
ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க கோரி
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு
வருடமும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மூப்பு
அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்தாண்டும்
அதற்கு முந்தைய ஆண்டு பயிற்றுநர்களில் பாதியளவு மாற்றம் செய்யவில்லை.
இதை எதிர்த்து வழக்கு
தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை
விதிக்கவும், தங்களுக்கு பணி மாறுதல் வழங்க என்றும் கோரப்பட்டது.
அவ்வழக்கின் தீர்ப்பு நேற்று(04.12.2014) வழங்கப்பட்டது. அதில் 885
ஆசிரியர் பயிற்றுநர்களை 15 நாட்களுக்கு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய
வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில திட்ட இயக்குனர்
அவர்களுக்கும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
VERY VERY THANKS TO OUR ARGTA (BRTE) ASSOCIATION ,CREATE SUCCESS ,THANKS TO STATE LEADER MY KASIPANDIAN ,MADURAI & GEN SECRETARY MR RAJIKUMAR DINDUKKAL DT M,O MADURAI B.O VILLUPURAM DT 9443378533
ReplyDeleteஅன்பார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கு இனிய வணக்கம். 04-12-2014 அன்று நான் தெரிவித்த தகவலில் சிறிய தவறு ஏற்பட்டுவிட்டது.இதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். சரியான தகவல் பின்வருமாறு .வெற்றி வெற்றி அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் . மதுரை,கிளை விழுப்புரம் மகத்தான இனிய வெற்றி.மதுரை உயர்நீதிமன்றத்தில் நமது மாநில பொதுச் செயளாலர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.885 ஆசிரியர் பயிற்றுநர்களை எவ்வளவு விரைவாக பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடைமாற்றம் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!நன்றி!நன்றி!இவன் என்றென்றும் உங்கள் இனிய நண்பன் தா.வாசுதேவன்,மாநிலத் துணைச் செயளாலர்,அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.மதுரை. கிளை விழுப்புரம் மாவட்டம்.7845236109
ReplyDelete