அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழக
உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளின் மாணவர்கள் பயன் பெறும்
வகையில் தமிழக அளவிலான வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி
வருகிறது.
2015-ஆம் ஆண்டுக்கான
வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23-ஆம் தேதி தொடங்கி திருநெல்வேலி மண்டலம்,
கோவை மண்டலம், சென்னை மண்டலம் என மூன்று மண்டலங்களிலும் 2015 ஜனவரி மாதம்
வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க
விரும்பும் மாணவர்களிடம் பதிவுக் கட்டணமாக ரூ. 750 வசூல் செய்து, அந்தத்
தொகை அனைத்தையும் ஒரே வரைவோலையாக எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு
அனுப்பி வைக்க வேண்டும் என வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் கல்லூரி
முதல்வர்களை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு
முதல் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவ, மாணவிகள்
மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கத் தகுதியுள்ளவர்கள் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த
மண்டலங்களில் எந்தெந்த நாள்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்ற
விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...