தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்
சி.விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்
சங்க தேசிய மருந்தியல் விழா, மாநிலபொதுக்குழு, மாநில செயற்குழு ஆகிய
முப்பெரும் விழாவில் முதன்மை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று
பேசியதாவது:
தமிழகம் சுகாதாரத்துறையில் முதன்மை மாநிலமாகவும், முன்னோடி மாநிலமாகவும்
திகழ வேண்டும் என்ற மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியத்தை
நிறைவேற்றும் வகையில் அனைவரும் செயலாற்ற வேண்டும். அரசுப்பணிகளில்
செம்மையோடும்,சேவை மனப்பான்மையோடோடும் பணியாற்றக் கூடியதுறை
சுகாதாரத்துறை.ஆகவே மருந்தை ஆளுமை செய்கின்ற, மருத்துவர்களின் வழிகாட்டலைப்
புரிந்து கொண்டு மருந்து எடுத்துக் கொடுக்கும் திறமையுடைய
மருந்தாளுநர்களின் கோரிக்கைகளை கனிவோடு,பரிவோடு பரிசீலனை செய்து
நிறைவேற்ற இந்தஅரசு தயாராக இருக்கிறது. தேசிய அளவில்தமிழகம் அனைத்துக்கும்
முன்மாதிரியாகத்திகழ்கிறது.அதில் சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாகத்
திகழவேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா
கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்ட ரூ.3,888 கோடியை நிதியை விட தற்போது ரூ.7005
கோடி நிதியை ஒதுக்கியுள்ளார்.
770 நடமாடும் மருந்தகங்களை உருவாக்கி, அதில், மருந்தாளுநர்களுக்கு பணி
வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதலாவதாக தமிழகத்தில்
மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தை(MRB)உருவாக்கி, அதன் மூலம் 4 ஆயிரம்
மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும்,.2,170 மருத்துவர்களும், 1,727
சிறப்பு மருத்துவர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.புதிதாக 118 அரசு
ஆரம்பசுகாதார நிலையங்கள் தொடங்கப்படும், 6 ஆயிரம் செவிலியர்களும் விரைவில்
தமிழகம் முழுவதும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத்திட்டம் மூலம் அரசு
மருத்துவமனைகளுக்கு இதுவரைரூ. 650 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மாநிலம்
முழுவதும் தினமும் சுமார் 5.50 லட்சம் பேர் புற நோயாளிகளாகவும், உள்
நோயாளிகளாக 80 ஆயிரம் பேரும், 2 ஆயிரம் தாய்மார்கள் பிரசவத்துக்காகவும்
அரசு மருத்துவமனைகளை நாடிவந்து சிகிச்சை பெறுகின்றனர். மற்றதுறைகளை விட
இத்துறையில்தான் சிறியகுறைகள் கூட ஊதிப் பெரிதாக்கப்படுகிறது.
இச்சூழ்நிலையில், மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மருந்தாளுநர்கள்
மக்களிடம் எப்போதும் அன்பும்,அரவணைப்புடன் அனைவருக்கும் தெரியக்
கூடியவகையில் சேவையை ஆற்றவேண்டும் என்பதை இந்த அரசு எதிர்பார்க்கிறது.
நீங்கள் சேவைத்துறையில் இணைந்துள்ளதால்,அதை இந்த சமுதாயம் புகழக் கூடிய
துறையாக மாற்றவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது என்றார் அமைச்சர்
விஜயபாஸ்கர்.முன்னதாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன்,
மாவட்டஆட்சியர் சு.கணேஷ், இஎஸ்ஐ- மருத்துவம், ஊரகப்பணிகள் இயக்குநர்
என்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதையடுத்து மாவட்டத்
தலைவர் ஆர். காமராஜ் தலைமையில் நடைபெற்ற தேசிய மருந்தியல் விழாவில்,கேரளா,
ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள்
பேசினர்.இதையடுத்து மாநிலத்தலைவர் கே.ராஜாராம்பாண்டியன் தலைமையில்
நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும்பொதுக்குழுவில் மாநிலப்பொதுச்செயலர்
ஆர்.கணேசன், மாநிலபொதுச்செயலர் என்.ராஜ்கணேஷ்உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள்
பேசினர். இதில், பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்டச்செயலர் நெ. களஞ்சியம்முகமது வரவேற்றார்.புதுகை
மண்டலச்செயலர் ஆர்.முரளிதரன் நன்றிகூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...