நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் இடைநிலை ஆசிரியர் நியமன தேதியை அரசாணை எண்.400ன் படி 60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -மாநில திட்ட இயக்குனருக்கு
கோரிக்கை மனுவை அளித்தார்.குறுவள மைய பயிற்சி நாட்களை, சிறப்பு தற்செயல்
விடுப்பு அல்லது வேலை நாளாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது; தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ்
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா
குல்கர்னி அவர்களை சந்தித்து கீழ்காணும் கோரிக்கைகளை வைத்தார்.
*உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்குவது போன்று தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குனர் உடனடியாக உரிய அலுவலரிடம் விசாரித்தார். மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
*கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட மணி நேரம் கற்பித்தல் பணி இலக்கு உள்ளது என்றும், அதற்கான திட்டங்கள் தொகுத்து அனுப்பப்பட்டுள்ளது எனவும் இயக்குனர் தெரிவித்தார்.
*பள்ளிகளில் பாடத்திட்டம், புத்தகம், செயல்வழிக்கற்றல் துணைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றை வைத்து கற்பிக்க வழிவகை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் தெரிவிக்கையில் அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக உள்லதெனவும், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
*14 வகை விலையில்லா பொருட்களை (உடை, புத்தகம், நோட்டுகள் உட்பட) பள்ளிகளுக்கே நேரடியாக வழங்கவும், அதற்கான நிதி ஒதுக்கீடு, திட்டமிடல், திட்டவடிவான சத்துணவு பொருட்களை வழங்குவது போன்றே வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஏற்னெவே இதற்கு முன் அஞ்சலக வழியாக புத்தகங்கள் அனுப்பியுள்ள நிலைமையை சுட்டிக்காட்டப்பட்டது. மேற்காணும் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்குனர் உறுதியளித்தார்.
தொடக்கக் கல்வி இயக்குனருடன் சந்திப்பு
*நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் இடைநிலை ஆசிரியர் நியமன தேதியை அரசாணை எண்.400ன் படி 60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
*நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் பொழுது தலைமையாசிரியர் பதவியிறக்கத்தை தவிர்த்து அதே ஒன்றியத்திற்குள் கூடுதல் தலைமையாசிரியர் பணியிட்ம் வழங்கவும், பட்டதாரி ஆசிரியரை விருப்பத்தின் அடிப்படையில் துறை மாறுதல் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைப்பதாக இயக்குனர் உறுதியளித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...