தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் 2 லட்சம் பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வுக்கான ரிசல்ட் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார் பில் குரூப் 4
பணியில் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று
நடந்தது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சத்து 72 ஆயிரத்து 293
பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்காக 244 மையங்களில் 4448 தேர்வு
கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 263 மையங்கள்
அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை
நடந்தது. பல பெண்கள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள்
தேர்வு எழுத சென்ற நேரத்தில் குழந்தையை கணவன் மற்றும் உறவினர்கள் பார்த்து
கொண்டனர். முறைகேடு நடக்காமல் தடுக்க மாவட்ட துணை கலெக்டர், வருவாய்
கோட்டாட்சியர் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர். பல்வேறு மையங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. சென்னை
எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி
தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா
உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
டிஎன்பி எஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: குரூப் 4 தேர்வு
பணிக்கு என 4448 முதன்மை கண்காணிப்பாளர்கள், 63665 தேர்வு கூட
கண்காணிப்பாளர்கள், 457 பறக்கும் பணி அலுவலர்கள் என சுமார் 68,570 பேர்
ஈடுபடுத்தப்பட்டனர். ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதிய மையங்கள்
அனைத்தும் வெப் கேமரா மூலமும் நேரடியாகவும் மற்ற தேர்வு கூடங்களின்
அனைத்தும் காட்சிகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட
கலெக்டர்கள், வருவாய் துறை அதிகாரிகள் தேர்வு கூடங்க ளுக்கு சென்று திடீர்
ஆய்வு பணிகளை மேற்கொண் டனர். தேர்வுக்கு விண்ணப் பிக்க உச்ச வரம்பு
நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதியுள்ளனர்.
இத்தேர்வுக்கு நேர்முக தேர்வு கிடையாது. தேர்வுக்கான கீ ஆன்சர் (விடைகள்)
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
அதன் பின்னர் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள்(ஓஎம்ஆர் ஷிட்) அனைத்தும்
ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். நேர்மையாகவும்,
வெளிப்படையாகவும், எந்த வித தவறும் நடக்காமல் விடைத்தாள் திருத்தப்படும்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
இதனால், தேர்வு எழுதியவர்கள் யாரும் முறைகேடு நடந்து விடுமோ? என்று
அச்சப்பட தேவையில்லை. விடைத்தாள் திருத்தப்பட்டு விரைவில், அதாவது 2 அல்லது
இரண்டரை மாதத்தில் இடஒதுக்கீடு அடிப்படையில் ரிசல்ட் வெளியிட நடவடிக்கை
எடுக்கப்படும். குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15
நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.
2 லட்சம் பேர் ஆப்சன்ட்:
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா கூறுகையில், ‘ குரூப் 4 தேர்வை 84
சதவீதம் பேர் எழுதியுள்ளனர்’ என்றார். தேர்வுக்கு 12,72,293 பேர்
அனுமதிக்கப்பட்டனர். அதில் 84 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது,
10 லட்சத்து 68 ஆயிரத்து 726 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். 16 சதவீதம் பேர்
அப்சென்ட் ஆகியுள்ளனர். அதாவது, 2 லட்சத்து 3 ஆயிரத்து 567 பேர் தேர்வு
எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...