மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரையாண்டு தேர்வு தற்போது முடிந்த நிலையில் ஜன.,2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு
5ம் தேதி முதல் 22 வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு
நடக்கிறது. பின் ஜன., 29ல் துவங்கி பிப்.,5 வரை இரண்டாம் திருப்புதல்
தேர்வு நடக்கிறது. அதை தொடர்ந்து அரசு செய்முறை தேர்வுகள்
துவங்குகிறது.இவ்வாறு தொடர்ந்து தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்
திருப்புதல் தேர்வுகளில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு
ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவும், பொதுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி
அளிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள்.
தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சரவண
முருகன், மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன் கூறுகையில் "பொதுவாக அரசு
செய்முறை தேர்வுக்கு பின் தான் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடக்கும்.
ஆனால் இம்முறை அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து தேர்வுகள் இருப்பதால் மாணவர்களுக்கு சில அசவுரியங்கள்
ஏற்படும். எனவே வழக்கம்போல் செய்முறை தேர்வுக்கு பின் இரண்டாம் திருப்புதல்
தேர்வை நடத்த வலியுறுத்தியுள்ளோம்" என்றனர்.
Not only +2 and also 10 the std Jan 12 the start up to mar 13 revision ... 4 revisions test ...not necessary this.. No time To revisions.... CEO and DEO change this...
ReplyDeleteCooperative posting poduvangala eli ya?
ReplyDelete