"தமிழகத்தில், கல்விக்காக, 20 ஆயிரம் கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என, அமைச்சர் ரமணா கூறினார். திருவள்ளூர்,
சத்தியமூர்த்தி தெருவில், க.மு.ந., சகோதரர்கள் நகராட்சி உயர்நிலைப் பள்ளி,
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேல்நிலைப் பள்ளி திறப்பு விழா,
நேற்று முன்தினம், நகராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
பால்வளத் துறை அமைச்சர் ரமணா, பல்வேறு
நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: குழந்தைகள் எந்த ஒரு
காரணத்திற்காகவும், படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக,
கட்டணமில்லா கல்வி, விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், பாடப் புத்தகங்கள்,
குறிப்பேடுகள், புத்தகப்பை, காலணிகள் என, தமிழக அரசு வழங்கி வருகிறது.
கல்விக்காக, எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத
வகையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு
அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...