பேரூராட்சி கம்ப்யூட்டர் பணியாளர்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியிடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
மாநிலத்தில் 529 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் உள்ள சொத்துவரி, தொழில்வரி, குழாய்வரி, குடிநீர் வரி, கடை லைசென்ஸ் சலான், பிளான் ரசீதுகள், பில்கள், வவுச்சர்கள் என அனைத்திற்கும் கம்ப்யூட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. பேரூராட்சிகளில் இருந்து இயக்குனர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அனைத்து பேரூராட்சிகளிலும் ஆன்லைனில் ரசீது முறை அமலுக்கு வந்துள்ளது. அனைத்து பணிகளுமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் மட்டும் நியமிக்கப்படவில்லை. அனைத்து பணியாளர்களுமே தற்காலிக பணியிடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 12 ஆண்டுகளாக குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை.தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் அனைத்து பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரன் கூறியதாவது: கம்ப்யூட்டர் பணியாளர்கள் இல்லாவிட்டால் பேரூராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துவிடும். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்து சம்பளம் வழங்க வேண்டும். செயல் அலுவலர்களும் கம்ப்யூட்டர் இல்லாமல் பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செயல்அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்கவேண்டும். இதன் மூலம் அரசுடன் தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ளமுடியும். எந்த தகவலையும் உடனுக்குடன் பெற முடியும். பேரூராட்சி நிர்வாகம் எளிதாகும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...