தமிழ் சங்கம் வெளிட்டுள்ள அறிக்கையில், தலைவர் தாமோதரன், செயலர் ஸ்ரீதரன்,
காமராஜர் உயர்நிலைப் பள்ளி தாளாளர் இராசுமாறன் கூறியிருப்பதாவது:
பெங்களூரு தமிழ் சங்கம், 10ம் வகுப்பு தேர்வுக்கு செல்லும் மாணவ,
மாணவியருக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும், தமிழ் மாதிரி வினாத்தாள்களை
வெளியிட்டு வருகிறது. அதேபோல், நடப்பு ஆண்டும் வினாத்தாள்
வெளியிடப்பட்டுள்ளது இந்த வினாத்தாள், கர்நாடகா உயர்நிலைப் பள்ளி
தேர்வாணையம் வரையறுத்த, வினாத்தாள் உள் வடிவமைப்பு முறையில்
அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள், பொது தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு
பெரிதும் உதவும் என, சங்கம் கருதுகிறது. தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ,
மாணவியருக்கு, இந்த தேர்வை நடத்தி, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என,
கேட்டுக் கொள்கிறோம். கர்நாடக மாநிலத்தில், தமிழ் மொழியை முதல் மொழியாக
பயிற்றுவிக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாள்கள் அனுப்பி
வைக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும், தமிழ் மொழியில், அனைவரும்
தேர்ச்சியடைய வேண்டும் என்பதே, தமிழ் சங்கத்தின் நோக்கம். வினாத்தாள்
கிடைக்கப் பெறாதோர், அதிக வினாத்தாள் தேவைப்படுவோர், தமிழ் சங்கத்தில்
பெற்று கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
10th
ReplyDelete