Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

          தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் டிசம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அவசர கால மருத்துவ உதவியாளர்,ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கான ஆள் எடுப்பு முகாம் கோயம்பேட்டில் உள்ள புனித தாமஸ் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும்.

          அவசர கால மருத்துவ உதவியாளர்- தகுதிகள்: மூன்று ஆண்டுகள் இளங்கலை அறிவியல் பாடம் எடுத்துப் பயின்றவர்கள், பி.எஸ்.சி. நர்சிங் பயின்றவர்கள் அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த ஓராண்டு பட்டயப் படிப்பு பயின்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். 19 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் முகாமில் பங்கேற்கலாம்.

ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்: 23 முதல் 35 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாதவர்கள், ஓட்டுநர் உரிமம் பெற்று, மூன்றாண்டுகள் அனுபவம் பெற்ற ஆண்கள் முகாமில் பங்கேற்கலாம். பங்கேற்பவர்களின் உயரம் 162.5 செ.மீ.க்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி, ஓட்டுநர் உரிமம், அனுபவம் தொடர்பான சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டு வருதல் அவசியம்.

மேலும் விவரங்களுக்கு: 044-2888 8060




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive