புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை தலைமையகம் எஸ்.பி.
ஐஆர்சி.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுவை காவல்துறையில்
புதிதாக 100 பெண் காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். பொது-50, ஓபிசி-11,
எம்பிசி-18, எஸ்.சி.-16, பிடி-1, இபிசி-2, பிசிஎம்-2 என மொத்தம் 100 பெண்
காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். உடல்தகுதி, எழுத்துத் தேர்வு,
உடல்திறன் தேர்வு அடிப்படையில் பெண் காவலர்கள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ்
டு அல்லது அதற்கு ஈடான கல்வித் தேர்ச்சியை விண்ணப்பதாரர்கள் தகுதியாக
பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வயதை நிர்ணயிப்பதற்கான தேதி
30.11.14 ஆகும். காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் உயரம் 154 செ.மீ,
எடை 45 கிலோ, குறைந்தபட்சம் இருக்க வேண்டும். 18 வயது முதல் 22 வயதுக்குள்
இருக்க வேண்டும். எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம், பிடி பிரிவினருக்கு 3
ஆண்டுகளும், எஸ்.சி, பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், சிறந்த விளையாட்டு
வீராங்கனைகளுக்கு 5 ஆண்டுகளும், விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள்,
நீதிமன்றத்தால் மணவிலக்கு அளிக்கப்பட்டு மறுமணம் செய்து கொள்ளாத
பெண்களுக்கும் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. 200 மீ ஓட்டம்-45
விநாடிகள், நீளம் தாண்டுதல்-2.75 மீ, உயரம் தாண்டுதல்-0.9 மீ உடல்தகுதி
தேர்வு வைக்கப்படும். கணிதம், பிசிக்கல் சயின்ஸ், பயாலஜி, ஹியுமன்
பிசியாலஜி, வரலாறு, புவியியல், பொது அறிவு, நடப்பு சம்பவங்கள் போன்றவற்றில்
200 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். புதுச்சேரி,
காரைக்காலில் ஆங்கிலம், தமிழிலிலும், மாஹேயில் மலையாளத்திலும், ஏனாமில்
தெலுங்கிலும் எழுத்துத் தேர்வு நடைபெறும். ஆனால் உடல்தகுதித் தேர்வு,
மருத்துவ சோதனை, எழுத்துத் தேர்வு புதுவையில் மட்டுமே நடைபெறும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதன்கிழமை காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 24-ம்
தேதி விண்ணப்பிப்பதற்கு இறுதி நாளாகும். மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட
ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் அனுப்ப 31-ம் தேதி கடைசி
நாளாகும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், வட்டார மொழியில் நடத்தப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
http:www.police.pondicherry.gov.in.
பதிவிறக்கம் செய்யப்ப விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டிய
முகவரி:The Superintendent Of Police, (HQ), No. Dumas Street, Puducherry.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...