கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்தவர் தேவதாஸ்.
கோவை அரசு போக்குவரத்து கழக மேலாளர். இவரது மனைவி சாந்தி. தனியார் பள்ளி
ஆசிரியை. இவர்களது மகள் கீர்த்தனா(17). பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஒரு
தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்தவர் ஆவார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் அரையாண்டு தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து படித்துக் கொண்டிருந்தார். திடீரென மாலையில், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் பணிமுடிந்து வீடு திரும்பிய தாய் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்து மகாலிங்கபுரம் போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி, போலீசார் கூறுகையில், ‘வயிற்று வலி தாங்காமல் மாணவி கீர்த்தனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக‘ தெரிவித்தனர். இதனிடையே, மாணவி படித்த பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...