அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத்
தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத்
தும் பணி நேற்று துவங்கியது.
பெரம்பலூர் மாவட்டத் தில் எஸ்எஸ்எல்சி எனப்ப
டும் 10ம்வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம்தேதி
தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை உயர்நிலை, மேல்நிலை என
மொத்தம் 125 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ மாணவி கள் எழுதுகின்றனர். அதே போல
பிளஸ்&2 வகுப்புக் கான அரையாண்டு தேர்வு கள் டிசம்பர் 10ம்தேதி தொ
டங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை 65 மேல் நிலைப்பள்ளிகளைச்
சேர்ந்த மாணவ, மாண விகள் எழுதுகின் றனர்.இந்நிலையில் தேர்ச்சி விகிதத் தை
அதிகரிப்பதற்காக கடந்த ஆண்டைப் போல அரையாண்டு தேர்வுக்கான அரசுப்பள்ளி
மாணவர்களின் விடைத்தாள்கள் இந்த ஆண்டும் மைய மதிப்பீட்டு முறையில்
திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெரம்பலூர் அரசு
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விடைத்தாள் திருத்தும் மையம்
அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெவ்வேறு பள்ளி ஆசிரியர்களால் விடைத்தாள்கள்
திருத்தும்பணி நேற்று தொடங்கியுள்ளது. இதன்படி தமிழ் முதல்தாள் திருத்தும்
பணி யில் 105 பட்டதாரி ஆசிரியர்களும், 29 முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களும் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, முதன் மைக் கல்வி
அதிகாரி(பொ) கலையரசி, மாவட்ட கல்வி அதி காரி(பொ)பாலு, நேர்முக உதவியாளர்கள்
பிரேம்குமார், தங்கராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள் ளனர்.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஜனவரி மாதம் பள்ளித் திறக்கப்பட்ட முதல் நாளே
மாணவர்கள் கைகளில் வழங்கப்படவுள்ளது.பிறகு அரையாண்டுத் தேர்வு
மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு, மிகக்குறைந்த
விழுக்காடு மதிப் பெண் பெற்றவர்கள், தேர்ச்சி பெறாத வர்கள் நிலையிலுள்ள
மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பயிற்சி
வகுப்புகளை நடத்த கல்வித்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்
மூலம், கடந்த ஆண்டைக் காட்டி லும் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும்,
அதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதே போல மற்ற மாவட்ட முதன்மை கல்விஅ திகாரிக்ளும் ஏன் செய்ய்வில்லை. அக்கறை உள்ள அதிகாரிக்ள் எப்படிஎல்லாம் சிந்திகிறார்கள். வாழ்க் அந்த அதிகாரிகள்.
ReplyDeletevery good...
ReplyDelete