Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB Exam For Special Teachers: Mark Allotment Details.

           உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர்  தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

             தமிழக பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை என, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இனவாரி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.கடந்த, 2012ல், சிறப்பாசிரியர் பிரிவில், உடற்கல்வி ஆசிரியர்கள், 1,028 பேரை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், மாநில அளவில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டது.

இதை எதிர்த்து, முத்துவேலன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை முடிவில், சிறப்பாசிரியர் பணிக்கு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தமிழகத்தில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, முழு தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.மேலும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு அமைய வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, புதிய விதிகளை உருவாக்க, டி.ஆர்.பி.,யிடம், தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

இதன் படி, டி.ஆர்.பி., அளித்த புதிய விதிமுறைகளை, பரிசீலித்த, தமிழக அரசு, அவற்றை அமல்படுத்தி, அரசாணை வெளியிட்டுள்ளது.இதன்படி, சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அல்லாமல், டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும், தேர்வு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவர்.வேலைவாய்ப்பு பதிவு மூப்பு 

பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.

மொத்தம், 100 மதிப்பெண்களில், 95 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கும், 5 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு காலியிடத்திற்கும், ஐந்து விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

மாநில, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பாடத்திட்டத்தை தயாரிக்கும். தேர்வு, மூன்று மணி நேரம், ஒரே தாளாக நடத்தப்படும்.'அப்ஜக்டிவ்' அடிப்படையில், 190 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், அரை மதிப்பெண் என, 95 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தும் பணி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் பட்டியல் வெளியிடுதல் என, அனைத்து பணிகளையும் டி.ஆர்.பி., மேற்கொள்ளும்.தேர்விற்கு, 500 ரூபாய் கட்டணம்; உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

5 மதிப்பெண்கள் எப்படி?

எண் தகுதி மதிப்பெண்

1. கூடுதல் கல்வித்தகுதி 0.5

2. முன்தகுதி (அரசு அல்லாதது) 0.5

3. அரசுப் பணி தகுதி 1

4. என்.சி.சி.,உட்பட கூடுதல் தகுதி 1.5

5 தோற்றப் பொலிவு 1.5

மொத்தம் 5

GO:


 




6 Comments:

  1. Very good... Nalla thittam... thiramaisaligal niraya per kidaipaargal... muraiyaga seyalpadutha enathu vaalthukkal TRB

    ReplyDelete
  2. Ungallipol nalla clever thiramaisalligal kidaipathu kadenam.you are a super thiramaisali

    ReplyDelete
  3. ithulayum computer science varatha?

    ReplyDelete
  4. Thanks. Please published TRB syllabus

    ReplyDelete
  5. What about computer part time teacher

    ReplyDelete
  6. how to prepare for drawing teacher exam. Please help me for study materials. where I get that materials.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive