Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 22 ஆயிரம் பேர் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு.

கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 22 ஆயிரம் பேர், ஆன்-லைன் மூலம் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பதாக வாசகி ஒருவர், ‘தி இந்து’ உங்கள் குரல் பதிவில் தெரிவித்திருந்தார்.

அவரின் நியாயமான வருத் தத்தை ஆசிரியர் தேர்வாணைய (டிஆர்பி) அலுவலர்கள் நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும் என்று தேர்ச்சி பெற்றவர்களில் பலர் தங்களின் ஆதங்கத்தை கூறியுள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதனால், இடைநிலை ஆசிரியருக்கான தகுதித் தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை டிஆர்பி செய்திருந்தது. இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஐந்து நாட்களுக்குள் தேர்ச்சிக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை அறிந்த 50 ஆயிரம் பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொண்டனர். 22 ஆயிரம் பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்யவில்லை.டிஆர்பி அறிவிப்பு வெளி யிட்டதை அறியாத நிலையில், பலர் குறிப்பிட்ட காலக்கெடுவான ஐந்து நாட்களுக்குள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைனில் இருந்து பதவிறக்கம் செய்யவில்லை.

தகவல் அறிந்து சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்தபோது, டைம்- அவுட் என வந்ததால், அவர்களால் தேர்ச்சி சான்றிதழை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.சான்றிதழ் பெறாத சிலர் இது குறித்து டிஆர்பி அளித்துள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு வாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வெளியிடப்படும் என்று கூறி யுள்ளனர், ஆனால், இரண்டு மாதம் கடந்தும், அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




3 Comments:

  1. PG TRB NEWS

    CONFUSING

    "மதிப்பெண் முறை"

    பின்பற்றப்படவுள்ளது.
    ======================
    WHY SC 45% WHY ST 40%
    ======================
    அதன்படி,

    General, BC, MBC, வகுப்பினர்

    குறைந்த பட்சம் 50% மதிப்பெண்,

    SC வகுப்பினர் 45% மதிப்பெண், ST

    வகுப்பினர் 40% மதிப்பெண்

    எடுத்தாக வேண்டும்.

    இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’

    செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப்

    பரிசீலிக்கப்படுவார்கள்.

    ReplyDelete
  2. In kovai sarala tone
    என்ன... என்ன இதெல்லாம்...
    Certifct vangiyum velai illa pattathari yaga than irukirom...

    ReplyDelete
  3. Download pannathavarku eppa than certificate kidaikum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive