முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான விண்ணப்பம், நேற்றுமதியத்துடன் விற்றுத்தீர்ந்ததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான எழுத்து தேர்வு, வரும் ஜன., 10ல் நடைபெற உள்ளது.
இத்தேர்வு எழுத விரும்பும் ஆசிரியர்கள், இம்மாதம் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்துக்கு 1,600 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முதல் நாளான 10ம் தேதி 800 விண்ணப்பம், 11ம் தேதியன்று 600 விண்ணப்பம் விற்றன. மீதமிருந்த 200 விண்ணப்பங்களும் நேற்று மதியத்துடன் விற்றுத் தீர்ந்தன. மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆசிரியர்கள், விண்ணப்பம் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.கோவை மற்றும் ஈரோட்டிலும் விண்ணப்பம் தீர்ந்து விட்டதாக தகவல் அறிந்த ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்ட போது,"" திருப்பூர் மாவட்டத்துக்கு 4,000 விண்ணப்பங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 1,600 விண்ணப்பங்கள் வந்தன. மீதமுள்ள விண்ணப்பங்கள் விரைவில் வரும். வரும் 21ம் தேதி வரை, ஆசிரியர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படும்,'' என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...