பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப்
பேராசிரியர் பணியில் சேருவதற்கு முதுநிலை பட்டப் படிப்பை முடித்து,
ஆராய்ச்சிப் படிப்பை (பி.எச்.டி.) முடித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலை
பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' தகுதித் தேர்வு
அல்லது மாநில அளவில் நடத்தப்படும் "செட்' தேர்வில் தகுதி பெற்றிருக்க
வேண்டும்.
இதில் "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில்
நடத்தப்படுகிறது. இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தி வந்த
இந்தத் தேர்வை, இப்போது 2014 டிசம்பர் மாதம் முதல் சி.பி.எஸ்.சி. (மத்திய
இடநிலை கல்வி வாரியம்) நடத்துகிறது. இந்த நிலையில், 2014 ஜூன் மாதம்
நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவுகளை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது.
இந்த முடிவுகள் www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...