ஒருவரின் போனின்
விலை மற்றும் தரத்தினை இன்று ஸ்கிரீன் அளவினை வைத்தே அதிகம் எடைப் போடப்படுகிறது. இந்த
டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் எவ்வாறு வளா்ந்து வந்துள்ளது? நாம் போன் வாங்கும் போது
எவற்றை எல்லாம் பார்க்க வேண்டும்? வாருங்கள் விவாதிப்போம்.
ஆரம்ப நாட்களில்
நாம் டயல் செய்யும் எண்ணை அறியவே திரை வடிவமைக்கப்பட்டது. எய்ட் பார்ட் (எட்டு என்ற
எண்ணின் அடிப்படை) டிஸ்ப்ளே போன்களில் பொருத்தப்பட்டு இருந்தன. இவற்றில் கால்குலேட்டரைப்
போன்று எட்டு என்ற எண்ணின் அடிப்படையில் எண்கள் தோன்றச் செய்யப்பட்டன. பின்னா் மிகக்
குறைந்த புள்ளிகளைக் கொண்ட வி.ஜி.ஏ (விஷிவல் கிராபிக்ஸ் அரே) டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்பட்டன.
நோக்கியா 1100 மாடல் போன்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இவற்றில் சுமார் 95வரிசைப்
புள்ளிகளும் (ரோ), சுமார் 65செங்குத்து வரிசைப் (காலம்ன்) புள்ளிகளும் அமைக்கப்பட்டன.
இதில் எழுத்துக்கள்
மற்றும் எண்கள் என எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் ஒரு எழுத்தினை உற்று பார்க்கும்
போது அது சுமார் 15தனித்த கருப்புநிற புள்ளிகளால் உருவாக்கப்பட்டது என எளிதில் கண்டறியலாம்.
அக்காலத்தில் பிக்சா் மெஸஜ்களை அனுப்புவதும் பெறுவதுமே இந்த போனின் உச்சகட்ட செயல்பாடு.
இந்த டிஸ்ப்ளேக்கள் மோனோகுரோமேடிக் (கருப்பு வெள்ளை) டிஸ்ப்ளேக்கள் என அழைக்கப்பட்டன.
அடுத்த தலைமுறை
மாற்றமாக இதே புள்ளிகள் எண்ணிக்கையில் (பிக்சல் கவுண்ட்) பல வண்ண டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்பட்டன.
இவற்றால் மேற்கண்ட எண்ணிக்கையிலான புள்ளிகளை கருப்பு மட்டுமின்றி, பல நிறங்களாக தோன்றச்
செய்ய முடியும். இந்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக நோக்கியா 1600 போன்களை கூறலாம்.
ஆரம்பகால இத்தகைய போனின் ஒரு புள்ளியால் (பிக்சளால்) 256வேறுபட்ட நிறங்களை மட்டுமே
தோன்றச் செய்ய முடியும். இவ்வகையில் ஒவ்வொரு புள்ளியும் சுமார் அரை மில்லிமீட்டர் சதுர
அளவு கொண்டதாக இருக்கும்.
ஐ.பி.எஸ் டிஸ்ப்ளே
அடுத்தடுத்த தலைமுறை
மாற்றங்களாக பிக்சல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன (270x176, 320x240, 640x480).
இதனுடன் ஒரு பிக்சளால் உருவாக்கப்படக்கூடிய வேறுபட்ட நிறங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
எழுத்துக்கள் தனியாகவும் அதற்கான பேக்கிரவுண்ட் வெளிச்சம் தனியாகவும் உருவாக்கப்ட்ட
எல்.சி.டி (லிக்யுட் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே) வகை திரைகள், டி.எவ்.டி (தின் பிலிம் டிரான்ஸிஸ்டா்)
வகை திரைகளாலும், பிக்சல்களே சுயவெளிச்சத்தை உருவாக்கும் எல்.ஈ.டி (லைட் எமிட்டிங்
டையோட்) திரைகளாகவும் மாற்றம் பெற்றன. இவற்றின் வேறுபட்ட நிறங்களை உருவாக்கும் திறனும்
சில நூறுகளில் இருந்து சில ஆயிரம் (64கே-64000நிறங்கள், 262கே-262000நிறங்கள்) தனித்த
நிறங்களை உருவாக்கும் டிஸ்பிளேக்களாக மேம்பட்டன. இவற்றின் ஒவ்வொரு பிக்சல்களின் அளவும்
10ல் ஒன்று முதல் 100ல் ஒரு மில்லிமீட்டா் அளவிற்கு குறைக்கப்பட்டன. சில பார்வை கோணங்களில்
மட்டும் இயல்பாகவும், பிற கோணங்களில் வேறுபட்ட நிறங்களாகவும் தோன்றும் மேற்கண்ட டிஸ்ப்ளேக்கள்,
ஐ.பி.எஸ் (இன் பிளேன் ஸ்விட்சிங்) எனப்படும் 1780 பார்வைக் கோணம் கொண்ட,
சிறப்பு வகை எல்.ஈ.டி திரைகளால்
ஓரங்கட்டப்பட்டன.
ஓரங்கட்டப்பட்டன.
தற்காலத்தில் ஒவ்வொரு
பிக்சலும் 16.7மில்லியன் தனித்த நிறங்கைளை உருவாக்கும் திறன் கொண்ட ஐ.பி.எஸ் வகை டிஸ்ப்ளேக்களே
அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 800வரிசை மற்றும் 480செங்குத்து வரிசை (சுமார்
368ஆயிரம் தனித்த) பிக்சல்கள் (புள்ளிகள்) இடம் பெறும். (மைக்ரோமேக்ஸ், சேம்சங் மற்றும்
நோக்கியா போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட் போன் மாடல்களில் (பத்தாயிரத்திற்குள்)
இவ்வகை திரைகள் பெருமளவு தோ்வு செய்ப்படும்).
சூப்பர் ஆமோலாய்டு டிஸ்ப்ளே
உயா்தர போன்களில்
சூப்பர் ஆமோலாய்டு (ஆக்டிவ் மேட்ரிக்ஸ் ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) எனப்படும்,
சிறப்பு வகை எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள் பயனப்டுத்தப்படுகின்றன. இவற்றின் தனித்த நிறங்களை
உருவாக்கும் திறனும், ஒவ்வொரு பிக்சல்களின் மிகச்சிறிய உருவ அளவும் சிறப்புடையவை. இன்றைய
நிலையில் இவையே டச் திரைகளின் உச்சம். இவற்றில் வளையக் கூடிய மற்றும் ஒளி ஊடுருவக்கூடிய
(திரைக்கு பின்னால் கை வைத்தால் கையும் தெரியும்) வகை திரைகளும் கவனத்தை அதிகம் கவா்கின்றன.
நோக்கியாவின் சி6-01
போனில் 640x360 துல்லியமுடைய திரைகள் அமைக்கப்பட்டன. பின்னா் சேம்சங் கேலக்ஸி எஸ் போனில்
800x480 துல்லியமுடைய திரையும், கேலக்ஸி நோட்டில் 1280x800 என்ற துல்லியமுடைய (720பி
எச்.டி) திரை அமைக்ப்பட்டது. பின்னர் கேலக்ஸி எஸ்4ல் 1920x1080 என்ற துல்லியமுடைய
(புல் எச்.டி) திரை அமைக்கப்பட்டது. இன்றைய உச்சமாக 2560x1440 துல்லியமுடைய (அல்ட்ரா
எச்.டி) திரைகள் கேலக்ஸி நோட்4 போன்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பி.பி.ஐ(பிக்சல்ஸ்
பா் இன்ச்) எனப்படும் ஒரு சதுர அங்குலத்திற்கு அடங்கும் பிக்சல்களின் எண்ணிக்கை
515வரை உயர்த்தப்பட்டுள்ளன.
கொரில்லா கிளாஸ்
மேற்கண்ட டிஸப்ளேக்கள்
அதிகம் துல்லியம் கொண்டவையாக இருந்தாலும் எளிதில் உடையக்கூடியவை. இவற்றினை பாதுகாக்க
சில வழிகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பம்.
இம்முறையில் கார்னிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, வேதியல் செயல்பாடுகளால் வலுவூட்டப்பட்ட
மிகமெல்லிய கண்ணாடி போன்ற அமைப்பானது, போனின் திரையின் மீது பொருத்தப்படும். இதனால்
கூர்மையான பொருட்களால் திரை கீரப்படுவதும்
அல்லது கிழிக்கப்படுவதும், மோதலினால் திரை உடைவதும் பெருமளவு குறைக்கப்படும்.
ரேஸ் காரிகளின்
எடையைக் குறைக்க உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு வகை கண்ணாடிகளை தங்கள் போன்களில் பொருத்துமாறு
வடிவமைக்க கார்னிங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் கேட்டது. இதனால் உருவானதே கொரில்லா
கிளாஸ். இதுவும் இன்று மூன்றாம் தலைமுறையில் உள்ளது. இந்த தலைமுறை கிளாஸ்களானது இதன்
முந்தைய தலைமுறை கிளாஸ்களைவிட தடிமனில் குறைந்தவை மட்டுமின்றி மிகவும் வலுவானவை. (இவையும்
குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டவையே)
நீங்கள் போன்களை
முரட்டுத்தனமாக பயன்படுத்துவீா்கள் என்றால் இது உங்களுக்கு சிறப்பான தோ்வாகும். மோட்டோரோலா
நிறுவனத்தின் மோட்டோ ஈ மற்றும் ஏசஸ் சென் போன்களே குறைந்த விலையுடைய கொரல்லா கிளாஸ்
கொண்ட போன்களாகும்.
Author: Pa. Thamizh
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...