உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகிய நான்கு
துறை உதவிப் பேராசிரியர் பணிக்கான இந்த இறுதித் தேர்வுப் பட்டியல்
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் காலிப்
பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பணியை டி.ஆர்.பி. மேற்கொண்டு
வருகிறது. கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று
நிலைகளில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு
நடத்தப்படுகிறது.
ஆங்கிலப் பாடத்துக்கு 133 பேர், தாவரவியல் பாடத்துக்கு 62 பேர், விலங்கியல்
பாடத்துக்கு 58 பேர், கடல்வாழ் உயிரின வளர்ப்பு பாடத்துக்கு 2 பேர் என
இந்தப் பட்டியல் டி.ஆர்.பி. இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
அடுத்ததாக கணிதம், இயற்பியல், இயற்பியல் - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்,
எலெக்ட்ரானிக் அறிவியல் - எலெக்ட்ரானிக் தகவல் தொடர்பியல், புள்ளியியல்
ஆகிய பாடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது எனவும்
டி.ஆர்.பி. அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் யாரும் இல்லையா.. உங்களது கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்..
ReplyDelete* பதவி உயர்வு பெற்ற பின் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள்
* இடைநிலை ஆசிரியராக இருந்து paper2 இல் தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றவர்கள்
* ஆங்கில வழிப் பள்ளிகளில்(1 இலட்சம் மாணவர்களுக்கு) ஆசிரியர் நியமணம்
* 2013 - 14 காலிப்பணியிடங்கள் என பல உள்ளன...