அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு
வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி
வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் ஆசிரியர்
பட்டய பயிற்சி முடித்து, கடந்த 6 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு
வருகின்றனர். தற்போது அரசு பள்ளியில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திட்டம் சிறப்பாக செயல்பட போதுமான
ஆசிரியர்கள் இல்லாததால், பல்வேறு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வில் 250 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று
வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களின்
நலனையும், வேலையில்லா ஆசிரியர்களையும் கருத்தில் கொண்டு காலியாக உள்ள 244
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...