கணினி தமிழ் விருது மென்பொருள் போட்டிக்காக, விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இகுறித்து, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினி தமிழ் விருது’ ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு விருது தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
அதன்படி, 2014ம் ஆண்டுக்கு ‘முதலமைச்சர் கணினி தமிழ் விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்குரிய மென்பொருட்கள் 2011, 2012, 2013ம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விருதுக்கு உரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சி துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org) இலவசமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் விருதுக்கான விண்ணப்பத்தை, எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...