ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற அகில இந்திய நிர்வாகப் பணிகளுக்காக, மத்திய
பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு
நிர்ணயிக்கப்பட்டு இருந்த வயது வரம்பு குறைக்கப்பட்டதா... இல்லையா... என்ற
குழப்பம் நீடிக்கிறது. இதனால், தேர்வு எழுத ஆர்வத்துடன் காத்திருக்கும்
இளைஞர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வாய்ப்பு:யு.பி.எஸ்.சி.,
தேர்வு தொடர்பாக, மத்திய நிர்வாக சீர்திருத்த ஆணையம், ஒரு பரிந்துரையை
அளித்துள்ளது. அதில், தேர்வர்களின் வயது வரம்பு மற்றும் தேர்வு எழுதும்
வாய்ப்பு பெரிய அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.இப்பரிந்துரையை, மத்திய
நிர்வாகத் துறை ஏற்று அதன் இணையதளத்தில், மூன்று நாட்களுக்கு முன்
வெளியிட்டது. '2015 முதல், இந்த நடைமுறை அமலுக்கு வரும்' எனவும்
அறிவித்தது. இதற்கு, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
உத்தரவு:அதே
நேரத்தில், புதிய அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி
உள்ளது.யு.பி.எஸ்.சி., தேர் வில், 2013ல் புதிதாக திறன் அறியும் தேர்வு
அறிமுகப்படுத்தப்பட்டது. இது, கடினமாக உள்ளதாக எழுந்த கோரிக்கையை ஏற்று,
தேர்வு எழுதும் வாய்ப்பு, அனைத்துப் பிரிவினருக்கும் இரண்டு முறை
அதிகரித்து, 2014 பிப்ரவரியில் உத்தரவிடப்பட்டது.
இதுவே, நிர்வாக சீர்திருத்த ஆணையம் தற்போது கொண்டு வந்துள்ள புதிய நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாலா ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் பாலமுருகன் கூறியதாவது:
யு.பி.எஸ்.சி.,
தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில், 70 சதவீதம் பேர், மூன்று முறைக்கு மேல்
தேர்வு எழுதியவர்களாகவும், 28 முதல் 30 வயது உடையவர்களாகவுமே
இருக்கின்றனர். 15 சதவீதம் பேர் தான், 25 வயதுக்குள் தேர்ச்சி
பெறுகின்றனர்.
சி.பி.எஸ்.இ., கல்வி
முறையில் பயின்றவர்கள் மட்டுமே, குறைந்த வயதில், யு.பி.எஸ்.சி., தேர்வில்
தேர்ச்சி பெறுகின்றனர். மற்றவர்கள் முதுகலைப் பட்டம் முடித்தாலும்,
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும்போது, ஆரம்ப கல்வியில் இருந்து தயாராக
வேண்டியுள்ளது. நாட்டின் கல்வி முறையும் இப்படித் தான் உள்ளது.இந்நிலையில்,
வயது வரம்பை குறைப்பது, தேர்வு எழுதும் வாய்ப்பை குறைப்பது போன்றவை,
யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற
மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
யு.பி.எஸ்.சி.,
தேர்வுக்கான வயது வரம்பை குறைக்கக் கூடாது என்பதே பொதுவான கோரிக்கை. ஆனால்,
இப்பிரச்னை குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. நிர்வாக சீர்திருத்த
ஆணையத்தின் பரிந்துரை, எப்போது வேண்டுமானாலும் அமலுக்கு வரலாம்.
எனவே, இத்தேர்வுக்கான வயது வரம்பு குறித்து, மத்திய அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
முன்
அறிவிப்பு:கல்வியாளர் நெடுஞ்செழியன்: மத்திய அரசின் அறிவிப்பு திடீரென்று
வெளியாகி, வரும் ஆண்டிலிருந்தே புதிய நடைமுறை அமலாகும் எனக் கூறியது,
அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. யு.பி.எஸ்.சி., தேர்வில், புதிதாக அறிமுகம்
செய்யப்பட்ட திறன் அறியும் முறையால், தேர்வு மிகக் கடினமாக உள்ளது என
புகார் எழுந்தது.
புதிய
நடைமுறை:இதையடுத்தே, அனைத் துப் பிரிவினருக்கும், தேர்வு எழுதும் வாய்ப்பை
இரண்டு முறை அதிகரித்து, முந்தைய மத்திய அரசு உத்தரவிட்டது.இந்நிலையில்,
அனைத்து சலுகைகளும் பறிக்கப்படுவது போல், வயது, தேர்வு எழுதும் வாய்ப்பை
குறைப்பது முறையற்றது. வயது மற்றும் வாய்ப்பு குறித்த புதிய நடைமுறை,
இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து அமல்படுத்தப்படும் என, அறிவித்தால், அதற்கு
ஏற்ப இளைஞர்கள் தயாராக முடியும்.
இல்லையேல், இத்தேர்வுக்காக தற்போது தயாராகிக் கொண்டிருப்பவர்கள், பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...